பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறம் 11

மார்பகத்தும், நெற்றிமீதும் முடிமீதும் இலங்கி னவை எவை என்பதைக் காட்டவங்தபோது,

உழுவைக் கூன் உகிர் கேழல்வெண் மருப்பு மாறுபடத் தொடுத்த மாலைஉத் தரியன் லேப் பீலி நெற்றி குழ்ந்த காணக் குஞ்சிக் கவடி புல்லினன் முடுகு நாறு குடிலே யாக்கையன் என்று பாடிக் காட்டினர்.

இறைவன் பல்வேறு சமையங்களில் வெற்றி கண்டு வாகை குடியவன். அவற்றுன் ஒன்று தாருகாவனத்து இருடிகள் விடுத்த வேங்கையினே வென்று வாகை குடிய தாகும். இறைவனைப் போலவே திண்ணனரும், காட் டகம் புகுந்து, வேட்டையாடி வாகை குடியவர். இவரது வேட்டையின் சிறப்பைப் பெரிய புராணத்தும், திருக் காளத்திப் புராணத்தும் பரக்கக் காணலாம், இதனைச் சுருங்கிய முறையில் "வேங்கை வென்று வாகை சூடிய சங்கரன் தன்னினத் தலைவன்’ எனக் கல்லாடர் ஈண்டுக் குறிப்பிட்டுள்ளார்.

திண்ணளுர் வில்லில் அம்பின்னத் தொடுத்து விலங் கின்மீது எய்யின், அது தவருது அதனை வீழ்த்துதல் வேண்டும். அது குறித்தே இவர் தேர்ந்த வில்லும் அம்பும் கொண்டு சென்ருர் என்பார் 'வில்லும் அம்பும் கல்லன தாங்கி’ எனப் பாடினர். திண்ணனர் மலேக் காட்டகத்து இயங்கி வேட்டை யாடியதை 'வற்றுக் கல்வனம் காற்றில் இயங்கி' என்ற அடி விளக்குகிறது. இவரது வேகமான இயக்கத்திற்கு இதனினும் ஏற்ற உவமை காண இயலாது. காற்று, காடு முழுவதும் பரவியது போலத் திண்ணனரும் காட்டகம் முழுதும்