பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சகர்பால் நடந்தலேந்த காலில் புண்ணும்

வாசல்தொறும் முட்டுண்ட தலையில் புண்ணும் செஞ்சொல்லை கினேந்துரு கும் நெஞ்சில் புண்ணும் திரும்என்றே சங்கரன்பால் சென்றேன் அப்பா கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்

கொடுங்காலால் உதைத்த புண்ணும் கோபமாகப் பஞ்சவரில் ஒருவன்வில்லால் அடித்த புண்ணும்

பார்என்றே காட்டிகின்ருன் பரமன் தானே என இராமச்சந்திரக் கவிராயரும் பாடிப் பரவசமுற்ற பாக்களைப் படிமின் படிமின் !

இவ்வளவு பழிக்கு இறைவர் ஆளானரானலும் கண்ணப்பர் தம் அன்பினேக் காளத்தியார் அறிவார்; காளத்தியார் பெருமையினேக் கண்ணப்பர்தாம் அறி வார். இதனைச் சைவசித்தாந்த சாத்திர நூலாம் திருக்களிற்றுப்படியார்,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்றமையால் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனேக்-கண்ணப்பர் தாம் அறிதல் காளத்தி யார் அறிதல் அல்லது.மற் றியாம்அறியும் அன்பன் մD51

என்று கூறுகிறது.

கல்லாடர் இயற்றிய திருமறத்தில் சில அரிய குறிப்புக்கள் விடுபட்டுள்ளன. காளத்தி அப்பருக்கே கண்ணே ஈந்தனர் கண்ணப்பர் என்பது எவரும் அறிந்த உண்மை. ஆனல், இந்நூல் காளத்தி அப்பன் என்று கூருமல், முக்கண் அப்பன்' என்று பொதுப்படக் குறிப்பிட்டுள்ளது. இறைவர்க்கு இறைச்சியை ஊட்டி ஞர் என்பது பேசப்படவில்லே. "காவில் வைத்த காட்