பக்கம்:கட்டுரை வளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியங்களில் இதிகாசக் கருத்துகள் 99

“எஞ்சா மரபின் வஞ்சி பாட

எமக்கென வகுத்த வல்ல; மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே ; அதுகண்டு இலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வவ்விய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிங் தாஅங்கு அறாஅ அருங்கை யினிதுபெற் றிகுமே.”*

-புறநானூறு, 378 : 9 -22 அடுத்து, கலித்தொகையில் இராவணன் கைலைமலை

யைப் பெயர்த்தெடுக்க முயன்று துயருழநத செய்தி குறிக்கப்படுகிறது :

  • இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமையமர்ந் துயர்மலை இருந்தன னாக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்புலி தடக்கையின் கீழ்ப்புகுத் தம்மலை எடுக்கல் செல்லா துழப்பவன் போல’

-கலி, 38 : 1-5

என்று வந்துள்ளது காண்க. பரிபாடலில்,

‘இந்திரன் பூசை, இவள் அக லிகை; இவன்

சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு, ஒன்றிய படியிதுஎன் றுரை செய் வோரும்’

-பரிபாடல், 19 : 50-52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/101&oldid=1377390" இலிருந்து மீள்விக்கப்பட்டது