பக்கம்:கட்டுரை வளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணப் போர்க்களங்கள் 117

திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறம் போயிற்று இராகவன்தன் புனித வாளி’ ---

- கம்ப, யுத்த, இராவண 19 8

இராவணன் இறந்த செய்தி கேட்டுப் பெருந்துயர் அடைந்த மண்டோதரி, போர்க்களம் புகுந்து, இராவணன் மார்பில் விழுந்து புலம்பி அரற்றுகின்றாள். அவல உணர்வு தரும் அப்பாடல் வருமாறு :

‘வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி

மேலும் கீழும்

எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம்நாடி

இழைத்த வாறோ

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில்

கரந்த காதல்

உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ

ஒருவன் வாளி’ !

-கம்ப, யுத்த, மண்டோதரி புலம்புறு படலம், 26

இவ்வாறு இராமாயணத்தின் முற்பகுதியில், “இதய மாம் சிறையில் வைத்தான்’ என்று, சீதையை இராவணன் தன் இதயச்சிறையில் கொண்டமையைக் குறிப்பிட்ட கம்பன், அதனை மறவாது, இறுதியினும் நினைவு கூர்ந்து பொட்பொருத்தமுற மேற்கண்டவாறு புலப்ப டுத்தியிருத்தல் மகிழ்ந்து பாராட்டத் தக்கதாம்.

இவ்வாறு, இராமாயணப்போர் பதினெட்டுத் திங்கள் நிகழ்ந்தது. தேவாசுரப்போர் பதினெட்டு ஆண்டுகளும், இராமாயணப் போர் பதினெட்டு மாதங்களும், பாரதப் போர் பதினெட்டு நாள்களும், செங்குட்டுவன் கனக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/119&oldid=1379520" இலிருந்து மீள்விக்கப்பட்டது