பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

D.base

205

debit



இடங்களைக் கொண்ட இணைப்பி, பெரும்பாலும் ஆர்எஸ்-232 சி முகவிடை இணைப்பில் பயன்படுத்தப் படுகிறது.

D.base file: தகவல் தளக்கோப்பு.

D.base programme : தகவல் தள செயல்முறை.

DBMS : டிபிஎம்எஸ்: Database Management System என்பதன் கூறும் பெயர். இதற்குத் தகவல்தள நிர்வாக முறைமை என்பது பொருளாகும்.

DC : டிசி : 1. தகவல் மாற்றம்(Data Convertor). 2. வடிவமாற்றம்(Design Change). 3.எண்ணியல் கணினி(Digital Computer). 4. நேர்மின்(Direct Current). 5. நேர்வட்டம் (Direct Circle). 6. பட வெளியீட்டு விசைப்பலகை (Display Console), ஆகியவற்றின் குறும்பெயர்.

DCTL: டிசிடிஎல்: Direct Coupled Tran sister Logic என்பதன் குறும்பெயர். நேரடி இணைப்பு மின்மப் பெருக்கி (டிரான்சிஸ்டர்) தருக்க முறை என்பது இதன் பொருள்.

DDD : டி.டி.டி : நேரடித் தொலைவு அழைப்பு Direct Distance Dialling என்பதன் குறும்பெயர். நேரடித் தொலைதூர அழைப்பு என்பதாகும். தொலைபேசி இயக்குபவரின் உதவியில்லாமல் இவ்வசதியைப் பயன்படுத்தி வெகுதொலைவில் உள்ள தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள இயலும். தகவல் தொலைத் தொடர்புக்கும் இவ்வசதி பயன்படுகிறது.

DDL : டிடிஎல்; தகவல் விவரிப்பு மொழி : Data Definition Language என்பதன் குறும்பெயர். தகவல் அடிப்படை ஒன்றில் தகவல் வடிவங்களை வெளியிடுவதற்கான மொழி.

dead halt: முழு நிறுத்தம் : இச்சூழ் நிலையில் நிறுத்தப்பட்ட மையத்துக்கு முறைமையினால் திரும்ப வர முடிவதில்லை.

dead letter box : சேராக் கடிதப் பெட்டி : செய்திகளின் நடைமுறைக்கான முறைமைகளில் வழங்கமுடியாத செய்திகளைக் கைப்பற்றுவதற்கான கோப்பு.

dead lock : முட்டுக்கட்டை : முடக்க நிலை; தேக்கநிலை: ஆதாரம் ஒன்றிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு இடையூறாக இருக்கும், தீர்வுகாணப்படாத முட்டுக்கட்டை.

deallocation : விடுவிப்பு : இனிமேலும் தேவைப்படாத ஆதாரம் ஒன்றை ஆணை ஒன்றின் ஆதாரத்திலிருந்து விடுவித்தல். ஒதுக்கீடு என்பதற்கு எதிர்நிலையானது.

deadly embrace : தேக்கநிலை மேவல் : ஒரு செய்முறையில் இரு ஆக்கக்கூறுகள் ஒன்றின் பதிலை ஒன்று எதிர்பார்த்து ஒரு தேக்கம் ஏற்பட்டிருக்கும் நிலை. எடுத்துக்காட்டு: ஒர் இணையத்தில், ஒரு பயனாளர் 'A' என்ற கோப்பில் பணிபுரிந்து கொண்டு, 'B' என்ற கோப்பினை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், மற்றொரு பயனாளர் 'B' கோப்பில் பணியாற்றிக் கொண்டு 'A' கோப்பை எதிர் பார்க்கிறார் என்றால் இருவரும் ஒருவரையொரு வர் எதிர்பார்க்கின்றனர். இதனால், இருவர் பணியும் தேங்கி நிற்கிறது.

d-BASE : தகவல்தள ஆணைத் தொகுப்பு: ஆஸ்டன்டேட்(Ashton Tale) என்ற நிறுவனம் உருவாக்கிய தொகுப்பு.

debit card : பற்று அட்டை : கடை ஒன்றில் பொருள்களை வாங்கும் ஒருவர், பொருள்களுக்கான விலை