பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alphanumeric cha 55 alternate

alphanumeric characters : எழுத்து எண் வரையுருக்கள் : தகவல் செய லாக்க இயக்கங்களில் பயன்படுத்தப் படும் எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள்.

alphanumeric code : எழுத்துச் சரம்: A முதல் Z வரையுள்ள எழுத்துகள் மற்றும் 0 முதல் 9 வரையுள்ள எண் கள் இவற்றில் சிலவற்றைக் கொண்ட தொகுதி.

alphanumeric display terminal: எழுத்தெண் காட்சி முனையம் : கணினி முறைமையில் எழுத்தெண் தகவல்களைப் பதிவதற்கும் திரை யில் காட்டுவதற்குமான கருவி.

alphanumeric sort: எழுத்தெண் வரிசை யாக்கம்: ஒரு பட்டியலை எழுத்து வரி சையில் அல்லது எண்ணேறு முகத் தில் அல்லது இரண்டு வகையிலும் ஆக்கும் கணினிச் செயல் முறை.

alpha testing: முதல் கட்டச் சோதனை: பீட்டா ஆய்வுக்கு உட்படுத்தும் முன் னால் சொந்த நிறுவன ஊழியர் ஒரு வர் மூலம் புதிய பொருள் அல்லது பணித் தொகுப்பு ஒன்றை ஆய்வு செய்தல்.

altair : அல்டேர் (முதல் குறுங் கணினி): 1974ஆம் ஆண்டின் முதலா வது குறுங் கணினி எஸ் -100 தகவல் வழி மூலம் கணினிக்குள் உள்ளே அச்சிடப்பட்ட இணைப்புப் பலகை கள் இணைக்கப்பட்டிருக்கும். அல்டேர் 8800 - தொகுப்பு வடிவில் விற்பனைக்கு வழங்கப்பட்ட முதலா வது குறுங் கணினி ஆகும்.

alternate routing : மாற்று வழிய மைப்பு : இரண்டு முனைகளுக்கிடை யில் ஒரு வழித் தடத்தில் வழக்க மாகச் செல்லும் தகவலை, கட்ட மைப்பில் அதிகச் சுமை ஏறியதால் வேறு ஒரு வழித் தடத்தில் செலுத் தும் கணினி அமைப்பு.