பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



arithmetic

65

artifici


காட்டு: 13ஐ 10ஆல் இருமுறை பெருக்கியதால் கிடைப்பது 1,300 ஆகும். இதில் 13 என்ற எண் இரு இடங்களில் இடப்புறப் பெயர்ச்சி அடைகிறது.

arithmetic underflow: கணிதக் குறைவோட்டம் : சரியாகக் கூறமுடியாத அளவுக்குச் சிறிய எண்ணாக வரும் கணக்கீடு.

arithmetic unit:எண்ணியல் அலகு; கணக்கிடும்பகுதி.

ARPANET:'அர்பானெட்' மேம்பட்ட ஆய்வுத்திட்ட ஏஜென்சி இணையம்என பொருள்படும் Advanced Research Projects Agency Network என்பதன் குறும்பெயர். இது பாதுகாப்புத் துறை இடங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் கணினி அறிவுக் கூடங்களை இணைக்கிறது. இதன் நோக்கம் கணினி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், மிகவும் நம்பிக்கையான, சிக்கனமான இலக்கத் தகவல் தொடர்பை உருவாக்குதல்.

ARQ : ஏஆர்கியூ : தானியக்க முறையில் மீண்டும் அளிப்பதற்கான வேண்டுகோள். Automatic Repeat reQuest என்பதன் குறும்பெயர். தகவல் வழங்கப்படுவதை கண் காணிக்கும் பணி.

arrangement : ஏற்பாடு; வரிசை ஒழுங்கு : பொருள் பட்டியல்: சொற்களின் வரிசையொழுங்கு அல்லது ஒரு அமைவில் உள்ள தகவல் வகைகள்.

array : வரிசை அணி : 1. தொடர்புடைய பொருள் எண் வகைகளின் வரிசை.

array element : வரிசைப் பொருள்: வரிசையில் உள்ள ஒரு கூறு.

array index number : வரிசை அடையாள எண்: ஒரு வரிசையில் உள்ள

5

artifici

குறிப்பிட்ட பொருளை அடையாளம் காட்டும் எண்.

array iterator : வரிசை இயக்கி : ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் புகுந்து இயக்கத்தைச் செய்யும் ஒரு பணி.

'array processor: வரிசைச் செயலி: எழுத்துரு (matrix) கணக்குகளை சாதாரணக் கணினிகளைவிட விரைவாகக் செய்யக் கூடியது.

array reference : வரிசைக் குறிப்பு : எந்த வரிசையிலும் அணுகக் கூடிய சிறப்புத் தகவல் மதிப்பு.

artline:வரைகலை ஆணைத்தொடர்: ஐபிஎம் சார்பு நுண் கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்க முறை வரைகலை ஆணைத் தொடர். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன .

artwork : வரைகலை வேலை : வரி ஒவியங்கள் போன்ற வரைகலை வேலைகளைச் செய்தல்.

arrival rate:வருகைவீதம்:குறிப்பிட்ட அளவு நேரத்தில் தகவல் தொடர்பு சாதனத்தில் எத்தணை தகவல்கள் அல்லது எழுத்துகள் வருகின்றன எனும் வீதம்.

artificial inteligence (Al.):செயற்கை நுண்ணறிவு: ஒரு எந்திரம் எவ்வளவு அறிவுத் திறனுடன் இருக்க முடியும் என்பதை விளக்கும் கணினி அறிவியலின் ஒரு பிரிவு. பகுத்தறிதல், கற்றல் போன்ற மனித அறிவுத் திறனோடு தொடர்புடைய செயல்களைச் செய்யும் கருவி ஒன்றின் திறனோடு தொடர்புடையது.