பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

posture

1140

powerbook


களைப் பயன்படுத்தி வருகின்றன. இதிலுள்ள பணப்பதி வேடுகள், உண்மையில் ஒரு தனி நோக்கக் கணினி முனையமாகும். இது, வணிக நட வடிக்கைகளை அப்பண்டக சாலையின் தரவுக் கோப்புகளில் நேரடியாகப் பதிவு செய்து, காட்சித் திரையில் காட்டுகிறது. இது, பட்டியலிடுவதைக் கட்டுப்படுத்துகிறது;கடன் வசதி அட்டை செல்லத்தக்கது தானா என்று சரிபார்க்கிறது;பிற தரவுகளைக் கையாள கைப்பணிகளைச் செய்கிறது.

posture : நிலைப்பாடு.

potentiometer : மின்னழுத்த ஆற்றல் மானி;மின்னழுத்தஅளவி : எந்திரவியல் இயக்கத்திற்கு வீத அளவில் மின்னியல் வெளிப்பாட்டுக் குறியீடுகளை உண்டாக்குவதற்குப் பயன்படும் சாதனம்.

pots : பாட்ஸ் : மிகப் பழைய தொலைபேசி சேவை என்று பொருள்படும் Plain Old Telephone Service என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அடிப்படையிலான எண் சுழற்றுத் தொலைபேசி இணைப்புகளிலிருந்து பொது இணைப்பகப் பிணையத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் முறையில் அமைந்தது. கூடுதல் வசதிகள், செயல்பாடுகள் எதுவும் இல்லாதது. ஒரு பாட்ஸ்இணைப்பு என்பது, மேசை மீதுள்ள ஒரு சாதாரண தொலைபேசிக் கருவியுடனான இணைப்பைக் குறிக்கிறது.

pour : ஊற்று : ஒரு கோப்பினையோ அல்லது ஒரு நிரலின் வெளிப்பாட் டையோ இன்னொரு கோப்புக்கு அனுப்பி வைத்தல் அல்லது இன்னொரு சாதனத்துக்கு அனுப்பி வைத்தல்.

power : வர்க்கம்;ஆற்றல் : எண்னின் விசைப் பெருக்கத்தை (வர்க்கம்) குறிக்கும் குறியீடு. இதனை"அடுக்குப் பெருக்கம்"என்பர். நான்கின் மூன்று வர்க்கம் என்றால் 4x4x4 என்பதாகும். இதனை 43 என்று எழுதுவர்.

power amplifying circuit : மின் பெருக்க மின்சுற்றுவழி : ஒர் உட்பாட்டு மாற்று மின்னோட்ட (AC) மின்னழுத்தத்தை ஒரு வெளிப்பாட்டு நேர் மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றக்கூடிய மின்னணுவியல் மின்சுற்றுவழி.

powerbook : பவர்புக் : ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் கணினிக் குடும்பத்தைச் சேர்ந்த கையகக் கணினிவகை. இதனை கையேட்டுக் கணினி (Notebook Computer) என்பர்.