பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

printer buffer

1154

printer driver


printer buffer : அச்சடிப்பி இடை நினைவகம்;அச்சுப்பொறி இடை நினைவகம் : ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளிடமிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்புகின்ற நினைவகச் சாதனம். ஒவ்வொரு பக்கமும் அச்சிடும்வரை காத்திராமல், முழு வெளியீட்டையும் கணினிக்கு உதவுவது. அச்சுப் பொறி இடை நினைவகம் மற்றும் தானியங்கிப் பொத்தானுடன் இரண்டுக்கு மேற்பட்ட கணினிகள் இணைக்கப்பட்டு வெளியீட்டை முதலில் வந்தது முதலில் வழங்கப்படுகிறது என்ற முறையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

printer cable : அச்சுப் பொறிக் கம்பி : ஒரு அச்சுப் பொறியைக் கணினியுடன் இணைக்கும் கம்பி. ஒரு பீசியில் கேபிளிடம் 25 பின் டி. பி. 25-ஆண் இணைவி கணினிக்காகவும் அச்சுப் பொறிக்காக 36 பின் சென்ட் ரானிக்ஸ் ஆண் இணைப்பியும் இருக்கும்.

printer, chain : தொடர் அச்சுப்பொறி.

printer, character : எழுத்து அச்சுப்பொறி.

Printer Control Language : அச்சுப்பொறி கட்டுப்பாட்டுமொழி : ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் தன்னுடைய லேசர் ஜெட், டெஸ்க் ஜெட் மற்றும் ரக்டுரைட்டர் ஆகிய அச்சுப்பொறிகளில் பயன்படுத்திய மொழி. லேசர் அச்சுப்பொறிச் சந்தையில் லேசர்ஜெட் முன்னணி இடம் வகிப்பதால் அச்சுப்பொறி கட்டுப்பாட்டு மொழியே நிலைத்த தர வரையறையாய் ஆகிவிட்டது.

printer controller : அச்சுப் பொறிக் கட்டுப்படுத்தி : ஒர் அச்சுப்பொறியில் குறிப்பாக ஒரு பக்க-அச்சுப் பொறியின் செயலாக்கத்திற்கான வன்பொருள். இது ராஸ்டர் படிமச் செயலி, நினைவகம் மற்றும் பொதுப்பயன் நுண்செயலி களையும் உள்ளடக்கியது. அச்சுப்பொறிக் கட்டுப்படுத்தி சொந்தக் கணினியின் ஒர் அங்கமாகவும் இருக்க முடியும். மிகுவேக வடத்தின் மூலமாக கணினி யுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

printer, daisy wheel : டெய்ஸி சக்கர அச்சுப்பொறி.

printer, dot : புள்ளி அச்சுப் பொறி.

printer, dotmatrix : புள்ளியணி அச்சுப்பொறி.

printer driver : அச்சுப்பொறி இயக்கி : பல்வேறு பயன்