பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

public key encryption

1188

public rights


பதும் சட்ட வழக்குகள் தொடரப்படலாம் என்ற பயமின்றிச் சுதந்திரமாக எல்லோராலும் பயன்படுத்தப்படுவதுமான மென்பொருள். ஒரு செயல் முறையை உருவாக்கியவர் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்கிய ஒரு கணினிச் செயல்முறை. 2. தொலைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் இலவசச் செயல்முறைகள். இது "தனியுரிமை மென்பொருள்" (Proprietary Software) என்பதிலிருந்து வேறுபட்டது.

public file : பொதுக்கோப்பு : ஒரு அமைப்பு அல்லது கட்டமைப்பின் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் கோப்பு.

public key : பொது மறைக்குறி; பொதுத்திறவி : தனித்திறவி, பொதுத்திறவி ஆகிய இரண்டு திறவிகளின் அடிப்படையிலான மறையாக்கம். ஒரு பயனாளர் தனக்குரிய பொதுத்திறவியை பொதுமக்களுக்கு அறிவிக்கிறார். இதன்மூலம் எவரும் செய்திகளை மறையாக்கம் செய்து பயனாளருக்கு அனுப்பலாம். பயனாளர் அச்செய்திகளை மறைவிலக்கம் செய்து படிக்க, தன்னுடைய இலக்கமுறைக் ஒப்பமாகிய (digital signature) தனித்திறவியைப் பயன்படுத்திக் கொள்வார்.

public key encryption : பொதுத்திறவி மறையாக்கம் : மறையாக்கத்திற்கு இரட்டைத் திறவிகளைப் பயன்படுத்துகிற ஒர் ஒத்திசைவில்லா மறையாக்கமுறை. பொதுத்திறவியைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை, செய்திக்குரியவர் தனக்கே உரிய தனித்திறவி மூலம் மறைவிலக்கம் செய்து கொள்வார். இலக்கமுறைக் ஒப்பத்தைப் பொறுத்தவரை இந்த வழிமுறை எதிர்முறையானது. அதாவது செய்தியை அனுப்புபவர் இரகசியத்திறவியைப் பயன்படுத்தி ஒரு தனித்த மின்னணு எண்ணை உருவாக்குகிறார். இச்செய்தியினைப் படிக்க விரும்புபவர் அதற்கேற்ற பொதுத்திறவி மூலம் பரி சோதித்து குறிப்பிட்ட நபரிடமிருந்துதான் செய்தி வந்ததா என அறிந்து கொள்ளலாம்.

public network : பொதுப் பிணையம் : பொதுவாக ஒரு கட்டணம் செலுத்தி எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செய்தித் தொடர்புச்சாதனம்.

public object element : பொதுப்பொருள் உறுப்பு.

public property : பொதுப்பண்புகள்.

public rights : பொது உரிமைகள் : இணையத்தைப் பொறுத்த