பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

average

120

awk


அல்லது அசைவூட்டம், பயனாளரின் ஒளிப்படமாகவோ கேலிச் சித்திரமாகவோ இருக்கலாம். ஒரு விலங்கின் படமாகவோ அசைவூட்டமாகவோ கூட இருக்கலாம். பயனாளர் தன்னுடைய மெய்நிகர் நடப்புத் தோற்றமாகக் காட்டுவதற்குத் தேர்வு செய்த ஒரு பொருளாகவும் இருக்கலாம்.

average : சராசரி : புள்ளி விவர அல்லது எண் இலக்கச் சராசரி.

average latency : சராசரி உள்ளுறை சுணக்கம் : நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தில் முழு சுழற்சியில் பாதியில் பதிவுப் பரப்பில் சுற்றிவர ஆகும் நேரம்.

average search length சராசரித் தேடு நீளம் : ஒரு குறிப்பிட்ட முகவரியைக் கண்டு பிடிக்க சராசரியாகத் தேவைப்படும் நேரம் அல்லது செயல்களின் எண்ணிக்கை.

AVI : ஏவிஐ : கேட்பொலி, ஒளிக்காட்சி பிணைந்தது என்று பொருள்படும் Audio Vedio interleaved என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் இயக்க முறையில் பயன்படுத்தப்படும் ஒரு பல்லூடகக் கோப்பு வடிவம். ஒலி மற்றும் ஒளிக்காட்சி இவ்வகைக் கோப்புகளில் பதியப்படுகின்றன. மைக்ரோ சாஃப்டின் ரிஃப் (RIFF- Resource Interchange File Format) தொழில் நுட்பத்தைப் பின்பற்றியது. avionics : வான் மின்னணுவியல் : விமானங்கள் மற்றும் விண்கலங்களில் பயன்படும் மின்னணுக் கருவியமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள்.

avoiding data repetition : தகவல் சுழற்சியைத் தவிர்த்தல்.

. aw : . ஏடபிள்யூ : இணையத்தில் அருபாவைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவு களப்பெயர்.

AWC : ஏடபிள்யூசி : கணிப் பணியில் பெண்களுக்கான சங்கம் : Association for Women in Computing என்பதன் குறும்பெயர். கணினித் தொழிலில் ஈடுபட்டிருப்போரைக் கொண்ட சங்கம். கணினித் தொழிலில் பெண்களுக்கான தொழில் திறனை வளர்த்தல்; கணினித் தொழிலில் ஈடுபட்டிருப்போரிடையே தகவல் தொடர்பை ஊக்குவித்தல் இதன் முக்கிய நோக்கமாகும்.

awk , ஆக் , ஏடபிள்யுகே : Aho, Weinberger Kernighan atasil 19, 331 சுருக்கம். அஹோ, வெயின்பர்கர், கெர்னிகன் ஆகியோர்