பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reformat

1232

refresh cycle


அனைத்து முகவரிகளுக்கும் அந்த அஞ்சலை திருப்பி அனுப்பி வைக்கும்.

reformat : மறு அச்சுப்படி வாக்கம்;மறு படிவமாற்றம் : தரவுவை ஒரு அச்சுப் படிவத்திலிருந்து இன்னொரு அச்சுப்படிவத்திற்கு மாற்றுதல்.

refraction : ஒளி விலகல் கோட்டம் : ஒளி, வெப்பம் அல்லது ஒலி வெவ்வேறு ஊடகங்களின் வழி பாயும்போது கோட்டமடைதல்.

refresenrate : புதுப்பிப்பு வீதம்.

refresh : புதுப்பித்தல் : 1. கணினித் திரையிலுள்ள படிமம் மாறாவிட்டாலும், படக்குழலில் பாஸ்பரஸ் கதிரியக்கப்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் திரைக்காட்சி புதுப்பிக்கப்பட வேண்டும். 2. இயங்கு நிலை நினைவகச் (Dynamic Memory DRAM) சிப்புகளில் இருத்தி வைக்கப்பட்டுள்ள தரவு இழக்கப்படாமல் இருக்க அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டும். நினைவகப் பலகை 16யிலுள்ள ஒரு மின்சுற்று தானாகவே இந்தப் பணி கூறினை செய்து முடிக்கும்.

refreshable : புதுப்பிக்கத்தகு : ஒரு நிரல் செயல்படுத்தப்படும் போது, அந்நிரலின் செயலாக்கத்தைப் பாதிக்காமல், அந்நிரல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தரவுக்குப் பாதிப்பு ஏற்படாமல், நினைவகத்தில் தங்கியுள்ள அந்நிரலின் கூறு ஒன்றினை வேறொன்றால் பதிலீடு செய்யும் வசதி.

refresh circuitry : புதுத் துண்டல் மின்சுற்று நெறி : ஒரு காட்சித்திரையில் காட்டப்படும் தரவுகளையும், குறிப்பின்றி அணுகும் நினைவகத்தில் சேமித்துவைக்கப்பட்டு, படிப்படியாக மின்னேற்றத்தை இழந்து வரும் தரவுகளையும் மீட்டாக்கம் செய்வதற்குத் தேவையான மின்னணுவியல் மின்சுற்று நெறி.

refresh cycle : புதுப்பிப்புச் சுழற்சி : இயங்குநிலை குறிப்பின்றி அணுகு நினைவகச் (DRAM) சில்லுகளில் 1 என்னும் இருமத் தரவு பதியப்பட்டுள்ள நினைவக இருப்பிடங்களில் சேமிக்கப்பட்டுள்ள மின்னூட்டம் இழக்கப்படாமல் தக்கவைக்க அதனை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். நினைவகக் கட்டுப்படுத்தி மின்சுற்று, இதற்கான மின்துடிப்பைக் குறிப்பிட்டகால இடைவெளியில் வழங்குகிறது. ஒவ்வொரு மின்துடிப்பும் ஒரு புதுப்பிப்புச் சுழற்சி ஆகும். இத்