பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scratch filter

1289

screen font



சாதனத்தில் ஏற்றப்பட்டுள்ள தரவுகள் முழுவதையும் அல்லது பகுதியை படியெடுத்து தரவுகளின் கணிசமான கோப்புகளைச் செய்முறைப்படுத்தும் போது உருவாக்கப்படும் தற்காலிகக் கோப்பு.

scratch filter : அழித்தெழுது வடிகட்டி; கீறல் வடிகட்டி.

scratchpad : குறிப்பு அட்டை; கீற்றுத் திண்டு; கீறல் பட்டை; விரைவெழுத்துக் களம் : சில கணினிகளில் பதிவேடுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சிறிய துரிதச் சேமிப்பகம். இதனைப் புதை நினைவகம் என்றும் கூறுவர்.

scratchpad RAM : அழித்தெழுது ரேம்; எழுதுபலகை ரேம் : ஒரு மையச் செயலகம் தற்காலிக தரவுச் சேமிப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நினைவகம்.

scratchpad storage : அழிப்புத்திண்டுச் சேமிப்பகம் : விரைவெழுத்து சேமிப்பகம் : தரவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு நினைவக இடம். அழிப்புத்திண்டு நினைவகங்கள், அதிவேக ஒருங்கிணைந்த சுற்று வழிகள் ஆகும்.

scratch tape : அழிப்பு நாடா , விரைவெழுத்து நாடா : அழித்துவிட்டு மீண்டும் பயன்படுத்தத்தக்க காந்த நாடா.

screen : திரை : தகவல்கள் காட்சியாகக் காட்டப்படும் பரப்பு. எடுத்துக்காட்டு : ஒளிப் பேழைக் காட்சித்திரை.

screen angle : திரைக்கோணம் : நுண்பதிவுப் படத் திரைகளில் படப்புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும்.

screen capture : திரைப்பிடிப்பு : தற்போதுள்ள நேரடித்திரை உருக்காட்சியை ஒரு வாசகத்திற்கு அல்லது வரைகலைக் கோப்புக்கு மாற்றுதல்.

screen, display : திரைக்காட்சி.

screen dump : திரைச்சேமிப்பு ; திரைத் திணி : தற்போது ஒரு காட்சித்திரையில் தோன்றும் தகவலை ஒரு அச்சுப்பொறிக்கு அல்லது வேறு வன்படிச் சாதனத்திற்கு மாற்றுகிற செய்முறை.

screen editing : திரை திருத்தம்.

screen font : திரை எழுத்துரு : நேரடித் திரைக்காட்சியில் பயன்படுத்தப்படும் எழுத்து உரு. WYS/WYG பொறியமைவுகளில்