பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bell compatible modem

142

bench mark programme


முன்பகுதியிலும் ஏடீ & டீ நிறு வனம் வகுத்துத் தந்தது. வட அமெரிக்காவில் அவை பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இணக்கி (modem) களுக்கான சட்டபூர்வ தர வரையறைகளாக அவை காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1200 bps வரையிலான இணக்கிகளுக்கு இத் தரவரையறை இருந்தது. இந்த வேக இணக்கிகள் இப்போது வழக்கொழிந்து விட்டன 1200 bps-க்கு அதிகமான வேகமுள்ள இணக்கிகளுக்கு, சிசிஐ உடீ (CCITT) என்னும் அமைப்பு (இப்போது ITUCT) பரிந்துரை செய்யும் தர வரையறைகளே இப்போது உலகம் முழுவதிலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.

bell compatible modem : பெல் ஒத்தியல்பு இணக்கி : பெல் நிறு வனத்தின் தர வரையறைகளுக்கு ஏற்பச் செயல்படும் ஒர் இணக்கி.

bells and whistles : அனி ஆபரணங்கள்; அலங்கார அணிகள் : ஒரு மென்பொருள் அல்லது வன் பொருளுக்கு அதன் அடிப்படை செயல்பாட்டுக்கும் அதிகமாகக் கவர்ச்சிகரமான வசதிகளை வழங்குவது. எடுத்துக்காட்டாக, ஒரு காரில் அமைக்கப்படும் மின் கதவையும் குளிர்சாதனக் கருவியையும் கூறலாம். கணினிகளைப் பொறுத்தமட்டில் இத்தகைய அலங்கார அணிகலன்கள் எதுவும் இல்லாத கணினியை சாதா வெனில்லா கணினி என்பர்.

belt - bed photter; வார்பட்டை வரைவு பொறி : தத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க தொடர் வார் பட் டையைப் பயன்படுத்தும் எழுது கோல் வரைவு பொறி.

ΒΕΜΑ : பிஈஎம்ஏ : வணிகக் கருவி தயாரிப்பாளர் சங்கம் எனப் பொருள்படும் Business Equipment manufacturer's Association என்பதன் குறும்பெயர்.

benchmark : திறன் மதிப்பு : தர அளவு மதிப்பீடு செய்தல் : ஒரு கணினியின் செயல் திறனை ஒரு நிரலைப் பயன்படுத்தி தர அளவீடுகளைச் செய்வதைக் குறிப்பிடும் சொல். பொருள்களை ஒப்பீடு செய்ய உதவும் ஒரு தர நிருணயம்.

benchmark problem : திறன் மதிப்பீட்டுச் சிக்கல் : இலக்க முறை கணினிகளின் செயல் திறனை ஒப்பிட்டு, மதிப்பீடு செய்ய வடிவமைக்கப்பட்ட சிக்கல்.

bench mark programme : தர நிருணய நிரல் : மதிப்பீட்டு நிரல் : ஒரு கணினியின் திறன் மற்றும் பிற அளவைகளை மதிப்பிடும் நிரல்.