பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

terminator cap

1442

testing


terminator cap : முடிப்பிக் குமிழ் : ஓர் ஈதர்நெட் பாட்டையின் இரு முனைகளிலும் பொருத்தப்படும் தனிச்சிறப்பான இணைப்பி. இந்த இணைப்பிகளில் ஒன்றோ இரண்டுமோ இல்லாமல் போனால் ஈதர்நெட் பிணையம் செயல்படாது.

ternary : மும்மை;மூன்றாலான : 1. நிரலாக்கத்தில் ஒர் உறுப்பு மூன்று இயலும் மதிப்புகளில் ஒன்றைப் பெறும் பண்பியல்பு. 2. ஒரு நிபந்தனையில் மூன்று வெவ்வேறு நிலைகள். 3. அடியெண் 3 கொண்ட எண் முறைமை. (இரும, எண்ம, பதின்ம, பதினறும முறைகளைப்போல).

terrestrial link : தரைவழி இணைப்பு : தரையிலோ அல்லது அதன் அருகிலோ அல்லது அதற்கு அடியிலோ செல்லும் தகவல் தொடர்புக் கம்பி.

test : சோதனை : ஒரு நிரலைப் பல்வேறு கோணங்களில் பரி சோதித்தல். பல்வேறு உள்ளீட்டு மதிப்புகள் தந்து சரியாகச் செயல்படுகிறதா எனப் பரிசோதனை செய்தல்.

test automation software : சோதனைத் தானியங்கு மென்பொருள் : ஒரு மென்பொருள் பயன்பாட்டுத் தொகுப்பின் புதிய அல்லது திருத்திய பதிப்பைப் பரிசோதனை செய்வதற்கான அனைத்துச் செயல் முறைகளையும் ஒரு நிரல் மூலமே செய்து முடித்தல். சோதனையாளர் தரவேண்டிய உள்ளீடுகள் பிற கட்டளைகள் அனைத்தையும் சோதனைத் தானியங்கு மென்பொருளே செய்து முடிக்கும்.

test box : சோதனைப் பெட்டி.

test data : சோதனைத் தரவு : ஒரு குறிப்பிட்ட நிரல் தொடரின் இயக்கத்தை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட தரவு. ஒன்று அல்லது இரண்டு கையால் கூட்டபட்ட முடிவுகள் அல்லது தெரிந்த முடிவுகளுடன் சோதனைத் தரவு இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட நிரல் தொடர் செல்லத்தக்க தாக்கப்படும். சாதனைத் தரவுவாகப் பயன்படுத்தப்பட்ட தரவு செல்லாததாக இருக்கும்.

test driver : சோதனை இயக்கி : சோதனை தகவல் தொகுதிகளைத் திரட்டுவதில் வேறொரு நிரல் தொடரை இயக்கும் நிரல் தொடர்.

testing : சோதித்தல்;சோதனை செய்தல் : ஒரு நிரல் தொடரின்

நடத்தையை மாதிரி தரவு தொகுதியின்மீது இயக்கி