பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

train2

1470

transaction lock


நிகழ்வுகள். (எ-டு)இருமச் சமிக்கைகளை அனுப்பிடும் போது இடம்பெறும் இலக்க முறைத் துடிப்புகள்.

train2:பயிற்று,கற்பி:ஒரு மென்பொருள் அல்லது வன் பொருள் தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்று இறுதிப் பயனாளருக்குக் கற்றுக் கொடுத்தல்.

train printer:தொடர் அச்சுப்பொறி:ஒரு தடத்தில் உள்ள குண்டு அச்சுகளைப் பயன்படுத்தும் வரி அச்சுப்பொறி.

training:பயிற்சி:1.ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய தரவுகளைக் கற்றுத்தரல்.மென் பொருளைப் பொறுத்தவரை ஒரு பயன்பாட்டில் காணப் படும் அனைத்துக் கட்டளைகளின் மீது விளக்கம் தரப்படும். 2. தரவு தொடர்புகளில்,இரண்டு மோடெம்கள் தங்களுக்குள் சரியான வரைமுறை மற்றும் செலுத்து வேகத்தை முடிவு செய்தல். 3. குரல் அறியும் அமைப்புகளில்,ஒரு குரலைக் கண்டறிவதற்காக ஒரு வரின் மாதிரி களையும் அமைப்புகளையும் பதிவு செய்தல்.

transaction:பரிமாற்றம்;செயல் பரிமாற்றம்;செயலாக்கம்;செய்வினை: நடவடிக்கை அல்லது வேண்டுகோள். நிரல்கள்,வாங்கல்கள்,மாற்றல்கள், சேர்த்தல்கள் மற்றும் நீக்கல்கள் ஆகியவை ஒரு வணிகச் சூழ் நிலையில் பதிவு செய்யப்படும் பரிமாற்றங்களின் சான்றுகள். கேள்விகளும் மற்ற வேண்டுகோள்களும்கூட கணினிக்குப் பரிமாற்றங்கள் என்றாலும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பதிவு செய்யப்படுவதில்லை என்பதால் அவை பரிமாற்றங்களாகக் கருதப்படமாட்டாது. ஒரு கணினி அமைப்பின் வேகம் மற்றும் அளவை முடிவுசெய்ய பரிமாற்ற அளவே பெரும் காரணியாகக் கருதப்படும்.

transaction code:பரிமாற்றக் குறியீடு.

transaction document:பரிமாற்ற ஆவணம்:வணிகப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்படும் ஆவணம். சான்று வாங்கும் நிரல்,சம்பளக் காசோலை,விற்பனைப் பற்றுச்சீட்டு அல்லது வாடிக்கையாளர் சேவை.

transaction file:பரிமாற்றக் கோப்பு.

transaction journal:பரிமாற்ற இதழ்.

transaction lock:செயலாக்கப் பூட்டு,செய்வினைப் பூட்டு.