பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலோ கணினிக்கு இவ்வளவு பெரிய அகராதி வெளியிடப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை) நூலைத் தமிழில் வெளியிட இயன்றதென்றால், அதற்கு என் திறனோ இப்பணியில் என்னோடு இணைந்து பணியாற்றும் நண்பர் களின் திறமையோ மட்டும் காரணமில்லை. தமிழின் தனிப்பெரும் ஆற்றலே காரணம். ஏனெனில், இயல்பிலேயே தமிழ் ஒர் அறிவியல் மொழியாக, அறிவியலைச் சொல்வதற்கென்ற உருவான மொழியாக அமைந்திருப்பதுதான்.

இன்று "கணினிக் களஞ்சியப் பேரகாதி" உங்கள் கைகளில் தவழப் பெருந்துணையாயமைந்தவர் கப்பலோட்டும் தமிழர், பவழ விழா செல்வர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களாவார்.

"செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளலின் மறு பதிப் பாயமைந்துள்ள ஹாஜி. பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் கல்வி வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் மட்டுமல்லாது தாய்மொழியாம் தமிழ் வளர்ச்சியிலும் பேரார்வம் காட்டி வருபவர். கீழக்கரை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடும் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல்களுக்கு சீதக்காதி டிரஸ்ட் மூலம் பரிசளித்தும் வருவதே இதற்குத் தக்க சான்றாகும். அதன் தொடர்ச்சியாகவே இப்பேரகராதி விரைந்து வெளிவரவும் துணை நின்றார்கள். தமிழ் உள்ளவரை அவரது கொடைக்குணமும் தமிழ் வளர்ச்சியில் காட்டும் பேரார்வப் பெருக்கும் தமிழ்கூறு நல்லுலகால் நினைவுக் கூறப்படும் என்பது திண்ணம். காலத்தைக் கடந்து நிற்கும் அவரின் அரிய சேவையை என்றென்றுமாகப் பதிவு செய்யவே இந்நூலை அன்னாரின் பவழ விழா நினைவாக அவருக்குக் காணிக்கையாக்கி உள்ளேன்.

எனது முந்தைய நூல்களை ஆதரித்ததுபோன்றே இப்பேரகராதியையும் தமிழுலகம் இரு கரமேந்தி ஏற்று ஆதரிக்கும் எனப் பெரிதும் நம்புகிறேன்.

மணவை முஸ்தபா

நூலாசிரியர்