பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

character style

243

Charge Coupled Device


character style : எழுத்தின் பாணி; எழுத்தின் அழகமைவு : தடித்த எழுத்து, சாய்வெழுத்து, அடிக் கோட்டெழுத்து, சிறிய எழுத்து, பெரிய எழுத்து என எழுத்துகளின் பாங்கு மாறுபடுகிறது. எழுத்துரு (font) என்பதையும் எழுத்தின் பாங்காகச் சேர்ப்பது, இயக்க முறைமையையும் அந்தக் குறிப்பிட்ட மென்பொருளையும் சார்ந்ததாகும்.

character template : எழுத்துப் வார்ப்படம் : மின்னணு ஒளிக்கற்றை காட்சித் திரையில் எண்ணெழுத்துகளாக மாற்றித் தரும் ஒரு சாதனம்.

character terminal : எழுத்து முனையம் : வரைகலை திறனில்லாத காட்சித் திரை.

character type field : எழுத்து வகைப் புலம்.

character user interface : எழுத்து வழி பயனாளர் இடைமுகம்; எழுத்தமைப் பணிச் சூழல் : சியுஐ - Character User Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வெறும் எழுத்துகளை மட்டுமே திரையில் காட்டவல்ல பயனாளர் இடைமுகம், கணினிப் பணிச்சூழல். வரைகலைப் பணிச்சூழலுடன் ஒப்பிட்டு அறிக.

character view : எழுத்துத் தோற்றம்.

Charactron : கேரக்ட்ரான் : திரையில் எழுத்து அல்லது எண் எழுத்துகளையும், சிறப்பு குறியீடுகளையும் காட்டும் சிறப்பு வகை எதிர்மின் கதிர்க் குழாய்.

charge : மின்னேற்றம் : ஒரு பொருளில் உள்ள சமநிலைப்படுத்தப்படாத மின்சக்தியின் அளவு.

charge back systems : மின் கட்டண அமைப்புகள் : இறுதிப் பயனாளர் துறைகளுக்கு செலவுகளை ஒதுக்கீடு செய்யும் முறை. பயன்படுத்திய தரவு அமைப்பு மூலாதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செலவின் மதிப்பீடு செய்யப்படுகிறது.

charge card : மின்னூட்ட அட்டை : 286 பீ. சி. வகைகளை உற்பத்தி செய்யும் ஆல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வன்பொருள் நினைவக மேலாளர். 286 சிப்புவை வெளியே எடுத்து மின்னூட்ட அட்டையில் பொருத்தி அதை துளையில் பெருத்தலாம்.

Charge Coupled Device (CCD) : மின்னூட்டப் பிணைப்புச் சாதனம் (சிசிடி).