பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clipboard object

260

clobber


யைப் பயன்படுத்துவது போலவே, களப்பணி, தரவு சேகரிப்பு, கூட்டம் போன்றவற்றில் பிடிப்புப் பலகைக் கணினியும் பயன்படுத்தப்படும்.

clipboard object : இடைநிலைப் பலகைப்பொருள்கள்.

clipboard view : இடைநிலைப் பலகைத் தோற்றம்.

clipper : கிளிப்பர் : 'கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்' - சின் பயன்பாட்டு உருவாக்க மென்பொருள். முதலில் தரவுத் தள (dbase) மொழி மாற்றியாக இருந்து, பின்னர் தனித்து இயங்கும் பல சிறப்புத்தன்மைகள் உள்ள பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்கும் பணித்தளமாக உருவெடுத்தது. நான்டுக்கட் கார்ப்பரேஷன் இதை உருவாக்கியது.

Clipper Chip : கிளிப்பர் சிப்பு : துள்ளல் வகை இணைப்பு நெறி முறையையும், மறைக் குறியீடுகளைக் கொண்ட நெறிமுறையையும் அமல்படுத்துகிற ஒருங்கிணைந்த மின்சுற்று. அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கழகம் உண்டாக்கியது. 64 துண்மி தரவு தொகுதிகளையும், 80 துண்மிகளுக்கான திறவிகளையும் கொண்டது. தொலைபேசித் தரவுகளை இரகசியக் குறியீடுகளாக வைக்க அமெரிக்க அரசு இதனை உருவாக்கியது. மறைக் குறியீடுகள் என்ன குறிப்பிடுகின்றன என்பதை அமெரிக்க அரசு அறிய முடியும். அந்த மின்சுற்றைத் தன் நாட்டில் கட்டாயமாக்க முயன்ற அமெரிக்க அரசின் எண்ணம் நிறை வேறவில்லை.

clipping : நறுக்குதல்; செதுக்குதல் ; சீரமைத்தல் : காட்சித் திரை எல்லைகளின் வெளிப்பகுதியில் உள்ள படத்தின் பகுதிகளை நீக்குதல். scissoring என்றும் அழைக்கப்படும்.

clipping level : சீரமை அளவு : தன்னுடைய காந்தத் தன்மைகளைக் காத்து உள்ளடக்கங்களை வைத்துக் கொள்ளும் வட்டின் திறன். அதிக தரமுள்ள அளவு என்பது 65-70%; குறைந்த அளவு என்பது 55%-க்குக் கீழே.

clipping path : கிளிப்பிங் வழி : ஆவணமொன்றின் ஒரு பகுதியை மூடிமறைக்கப் பயன்படுத்தும் பல் கோண வடிவம் அல்லது வளைவு. ஆவணத்தை அச்சிடும்போது கிளிப் வழியில் உள்ளது மட்டுமே தோன்றும்.

clobber : மெழுகுதல் : ஒரு கோப்பில் உள்ள நல்ல தரவுவின் மேற்பகுதியில் புதிய தரவுவை எழுதியோ அல்லது