உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

முடியாதவாறு தனிப் பொதியுறையில் நிரந்தரமாய் பிணைக்கப்பட்டுள்ளதால் அதனை நிலை வட்டு என மொழியாக்கம் செய்துள்ளதும் முற்றிலும் பொருத்தமே.

இவ்வாறு திரு. மனவையாரின் மொழியாக்கச் சிறப்புக் கூறுகளைப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே என்று பழம் பெருமை மட்டுமே பேசிக் காலம் கழிக்காமல் நல்ல தமிழை நல்ல அறிவியல் தமிழை புத்தம் புதுத் தமிழைப் பற்றி எந்த நேரமும் சிந்தித்துச் செயலாற்றி வரும் திரு. மணவை யாரைப் போல் இன்னொரு தமிழறிஞரைக் காண முடியுமா என்பதே சந்தேகத்துக்குரிய கேள்வி. அரசும், பல்கலைக் கழகங்களும், வல்லுநர் குழுவும் செய்ய வேண்டிய ஒரு பணியைத் தனியொருவராக நின்று சாதித்துள்ள திரு. மணவையார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆங்கில மொழியில் கணினித் துறைக்கென எத்தனையோ அகராதிகளும், சொற்களஞ்சியங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்திய மொழிகளில் இதுவே முதலாவது நூலாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இவ்வண்

மு. சிவலிங்கம்