பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

combinatorial explosion

279

COMDEX


நிலையை முடிவு செய்யும் மின்சுற்று ஏற்பாடு. நினைவகப் பகுதிகளைப் பயன்படுத்தும் இலக்கமுறை அமைப்பு.

combinatorial explosion : ஒன்றிணைவு வெடிப்பு : கணினி தீர்க்க வேண்டிய சிக்கலின் அளவு மிக அதிகமாகிவிட்ட போது ஏற்படும் நிலை. பெரிய கணினிகளிலும் இந்நிலை ஏற்படலாம்.

combinatorics : இணைப்பியல் : நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் கொண்டது. பெரிய குழுவிலிருந்து எடுத்த உறுப்புகளைத் தொகுத்தல். குழுவில் உறுப்புகள் இருந்துவந்த வரிசையைப் பொருட்படுத்தாமல் எடுத்துத் தொகுக்க வேண்டும். சான்றாக, 4 பொருள்கள் கொண்ட குழுவிலிருந்து ஒவ்வொரு முறையும் இரண்டு உறுப்புகள் எடுத்து ஆறு இணைப்பு வகைகள் உண்டாக்குதல். ABCD என்னும் பொருள்களில் இரண்டை எடுத்து AB, AC, AD, BC, BD, CD என ஆறு உண்டாக்குதல். உறுப்புகளின் வரிசையை அப்படியே கொண்டு பெரியதிலிருந்து உறுப்புகள் எடுத்துத் தொகுப்பது வரிசை மாற்ற வகையாகும். உதாரணமாக நான்கு பொருள் தொகுதியிலிருந்து இரண்டு பொருள்கள் எடுத்து வரிசை மாற்ற வகை செய்தலைக் குறிப்பிடலாம். முதல் தெரிந்தெடுப்பான Aயில் நான்கிலிருந்து எடுக்க வேண்டியிருக்கும். அடுத்த 8 தெரிந்தெடுப்பு மீத மூன்றிலிருந்து எடுப்பதாகும். மொத்தத்தில் 12 வரிசைமாற்ற வகைகள் உண்டாக்கலாம். அதாவது AB, AC AD, BA, BC, BD, CA, CB, CD DA DB, DC.

combined head : சேர்வுத் தலைப்பு : ஒன்றிணைந்த தலைப்பு.

combining characters : கூட்டு எழுத்துகள்.

combo box : சேர்க்கைப் பெட்டி.

combo box control : சேர்க்கைப் பெட்டி இயக்குவிசை.

COMDEX : காம்டெக்ஸ் : தரவு தொடர்பு மற்றும் தரவுச் செயலாக்கக் கண்காட்சி எனப் பொருள்படும் Communications and Data Processing Exposition என்பதன் குறும்பெயர். அமெரிக்காவிலும் பிற இடங்