பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer abuse

300

Computer Aided Factory


களின் முடிவைத் தருவதன் மூலம் சிக்கல்களைத் தீர்க்கும் திறனுடைய சாதனம்.

computer abuse : கணினி கெடு வழக்கு.

Computer Aided Design (CAD) : கணினி உதவிடும் வடிவமைப்பு : காட்சி முறையும் ஒளிப்பேனா அல்லது பலகையின் மூலம் ஒரு கணினிக்கும், ஒரு வடிவமைப் பவருக்கும் இடையில் ஏற்படும் நேரடியான, தரவு தொடர்பினைக் கொண்ட கணினித் தொழில்நுட்பம். கட்டட வடிவமைப்பு, எந்திரங்கள் மற்றும் பொறியியல் கருவிகள் உற் பத்திப் பொருள்கள் வடிவமைப் புக்கு பெரிதும் உதவுகிறது.

Computer-Aided Design and Drafting (CADD) : கணினி உதவிடும் வடிவமைப்பு மற்றும் படம் வரைதல் : ஓவியங்களை உருவாக்குதல், படம் வரைதல், விருப்பங்களை வரிசைப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படும் கணினித் தொழில்நுட்பம்.

Computer Aided Designs Computer aided manufacturing (CAD/CAM) : கணினி ரேம்; கணினி உதவிடும் வடிவமைப்பு | கணினி உதவிடும் உற்பத்தி முறை : வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி முறை செயல்பாடுகளைத் தானியங்கி முறையில் செய்யும் முயற்சி. வேகமாக வளரும் கணினி வரைபட முறை. தற்போது கையெழுத்துக் கலை வரைபட முறையையே முக்கிய ஆதாரமாக கொண்டுள்ளது. என்றாலும் ராஸ்டர் வரைபட முறையை உள்ளடக்கிய பகுதிகள், கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் போன்ற பரவலான பயன்பாடுகளைச் உருவாக்க கிளை விட்டுள்ளது.

Computer-aided engineering : கணினி - உதவிடும் பொறியியல் : கணினி உதவிடும் வடிவமைப்பு முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் உற்பத்தி வடிவமைப்புகளின் மாதிரிகளை உருவாக்க, ஆராய, மதிப்பீடு செய்ய கணினிகளைப் பயன்படுத்துதல்.

Computer Aided Factory Management : (CAFM) : சிஏஎஃப்எம்; கணினி உதவிடும் தொழிற்சாலை மேலாண்மை : உற்பத்தி முறைகளையும், உற்பத்தித் தொழிற்சாலையின் இயக்கத்தையும் தானியங்கியாக செய்வதற்கு கணினிகளைப் பயன்படுத்துதல். Factory Automation என்றும் அழைக்கப்படுகிறது. உதிரி பாகங்களைக் கணக்கெடுத்தல். வழங்கு