பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deferred exit

414

de jure standard


மாற்றிய செயல்முறையிலிருந்து காலத்தாழ்வாக வெளியேறியதன் காரணமாக ஒரு நிரல்கூறில் செய்யப்படும் பதிவு.

deferred exit : தாமத வெளியேற்றம் : ஒத்திவைக்கப்பட்ட வெளியேற்றம் : முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் அல்லாமல், ஒருங்கிணைவில்லா ஒரு நிகழ்ச்சியினால் தீர்மானிக்கப்படும் ஒரு நேரத்தில் நிரல்கூறு கட்டுப்பாடு மாற்றப்படல்.

definition , பிரச்சினை ஒன்றுக்கான வரையறை : தருக்கங்களை பதின்ம வடிவுகளாகவும், பட்டியல்களாகவும் மற்றும் நிரல் தொகுப்பு விளக்கங்களாகவும் தொகுத்தல். அவை பிரச்சினையை தெளிவாக விளக்குகின்றன, வரையறை செய்கின்றன.

defrag : நெருங்கமை : அடுத்தடுத்த அமைவிடங்களில் வட்டுக் கோப்புகளில் தரவுகளைச் சேமித்து வைக்கும் நோக்கமுடைய DOS நிரல்.

defragmentation : நெருங்கமைத்தல் : ஒவ்வொரு கோப்பின் அனைத்துப் பகுதிகளும் அடுத்தடுத்த கூறுகளில் எழுதப்படுமாறு, அனைத்துக் கோப்புகளையும் ஒரு நிலை வட்டில் மறு படியும் எழுதுதல்.

degausser : காந்த புல நீக்கி : அழிப்பி : மின்காந்த வகையில் வட்டுகளிலும் நாடாக்களிலும் பதிவு செய்யப்பட்ட தரவுகளை அழிக்க உதவும் கருவி. இதனை பேரழிப்பி என்றும் கூறுவர்.

degradation : தரங்குறைத்தல் : தரமிழத்தல் : முறைமை தொடர்ந்து இயங்கினாலும், அதன் சேவை குறைந்த அளவிலேயே அமையும் முறையான கருவிப்பராமரிப்பு கிடைக்காத நிலை மற் றும் அன்றாடத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கணினி நிரல் தொகுப்புகள் பராமரிக்கப்படாதிருத்தல் ஆகியவை இரண்டு முக்கிய காரணங்களாகும்.

deinstall : நீக்கல் : இயக்கப் பயன்பாட்டிலிருந்து நிரல் தொகுப்பு ஒன்றையோ, வன் பொருளையோ நீக்குதல்.

dejagging : பிசிரற்ற வரைவு : பிசிரற்ற கோடுகளை, எழுத்துகளை, பல கோண வடிவங்களை வரையப் பயன்படுத்தப்படும் கணினி வரைபட உத்தி.

de jure standard : சட்டமுறைத் தர : அளவு அமெரிக்கத் தேசியத் தர நிமருணய நிறுவனம் (ANSI) போன்ற தர நிருணய நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்காடியில் விற்பனையிலுள்ள தர அளவுகள்.