பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

accounting machine

account policy


புழக்கங்களைப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் தரவுகள் பற்றிய தரவுகள் அடங்கியபட்டியல்.

accounting machine : கணக்கியல் எந்திரம்; கணக்கு வைப்பு எந்திரம் : 1. 1910 மற்றும் 50களில் வணிகக் கணக்கியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட எந்திரம். தானியங்கு தரவு செயலாக்கத்திற்குப்பயன்படுத்தப்பட்ட பழமையான கருவிகளுள் ஒன்று. தொடக்ககால கணக்கியல் எந்திரங்கள் மின்னணு அடிப்படையிலானவை அல்ல. துளை அட்டை மற்றும் செருகு பலகைச்சட்டங்களைப் பயன்படுத்தின. 2. கணக்கியல் செயல்பாடுகளுக்கு என்றே தனிச்சிறப்பாகப் பயன்படுத்தப்படும் கணினி. இக்கணினியை இயக்கியதும் அதில் பதிவுசெய்யப்பட்டுள்ள கணக்கியல் மென்பொருள் இயங்கத்தொடங்கும்.

accounting package : கணக்கிடு தொகுப்பு.

accounting routine : கணக்கிடு நடைமுறை.

accounting systems : கண்க்கிடும் அமைப்புகள் : நிதி சார்ந்த தரவுகளை அளவிட, விளக்க, ஆராய மற்றும் பரப்ப முடிவெடுப்பவர்களை அனுமதிக்கும் கணினி அமைப்புகள்.

account number : கணக்கு எண் : ஒரு கணினி மையத்தில் கணினி பயன்படுத்தும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அளிக்கப்படும் எண். அந்த எண் பாதுகாப்பு மற்றும் கட்டணம் கணக்கிடும் நோக்கத்துக்காகப் பயன்படும். நுழை சொற்களையும் (Passwords) கணக்கு எண்களாகப் பயன்படுத்தலாம் அல்லது நுழைச் சொற்களுடன் கனககு எண்ணும் தரப்படலாம்.

account policy : கணக்கியல் கொள்கை : கணக்குவைப்புக் கோட்பாடு : 1. குறும்பரப்புப் பிணையங்கள் மற்றும் பல்பயனாளர் பணித்தளங்களில் பயனாளர்களின் உரிமைகள் தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றிய வரையறைகள். ஒரு புதிய பயனாளர், முறைமையை அணுக அனுமதிக்கலாமா, ஏற்கெனவே உள்ள பயனாளருக்குக் கூடுதலான வளங்களைக் கையாளும் உரிமைகளையும் வழங்கலாமா என்பது போன்ற கொள்கை நிலைகளை வரையறுப்பது. ஒரு பயனாளர் தனக்குரிய சலுகைகளை முறைப்படி பயன்படுத்திக்