பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

drawing

484

drill-and-practice


drawing : வரைதல் : ஒரு கணினியின் வரைகலை திறன்களைப் பயன்படுத்தி வரைகலை முறையில் வடிவங்களை உருவாக்குதல். கணினி வரைகலை அமைவினால் கோடுகளை உருவாக்குதல் அல்லது வடிவம் மற்றும் வண்ணம் அளிக்கும் நிரலாக்கத் தொடர்களுடன் ஒரு துல்லியமான வரைபடம் வரையமுடியும்.

drawing programme : ஓவிய நிரல் : பொருள் அடிப்படையிலான வரை கலைப் படங்களைக் கையாள்வதற்கான ஒருநிரல். படப்புள்ளிகளால் (pixels) வரையும் படங்களைக் கையாள்வதிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஒவிய நிரலில், பயனாளர் கோடு, சதுரம், செவ்வகம், வட்டம், ஒர் உரைத் தொகுதி ஆகியவற்றை தனித்த பொருள்களாகக் கையாளலாம். அவற்றைத் தேர்வு செய்து நகர்த்தலாம், மாற்றலாம், வண்ணம் தீட்டலாம் (எ-டு) விண்டோஸ் 95/98 இயக்க முறையில் உள்வினைக்கப்பட்டுள்ள பெயின்ட் (Paint).

draw perfect : முழுநிறைவு வரைபடம் : IBM இசைவுடைய நுண் கணினிகளுக்கான ஒருவரைவுச் செயல் முறை. இந்த வரைபடச் செயல்முறை 256 வண்ணங்களைக் கொடுக்கிறது. இது, இருபரிமாண பட்டை, கலவை அச்சுப்படிவ, வரைபட படங்களை உருவாக்குகிறது.

DRDW : டிஆர்டிடபிள்யூ : எழுதும் போதே நேரடியாகப் படித்தல் என்னும் பொருள்படும் Direct Read During Write என்ற சொல்தொடரின் தலைப்பெழுத் துக் குறும்பெயர். ஒர் ஒளி வட்டில் எழுதும்போதே பதிவின் துல்லியத்தை சரிபார்க்க இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.

dribbleware : முன்னோட்ட மென்பொருள் : விற்பனைக்குவெளியிடப் படுவதற்கு முன்னதாகவே பகிரங்கமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுப் பொது மக்களால் பார்க்கப்படும் மென்பொருள். இது, மறை மென்பொருள் (vapourware) என்பதிலிருந்து ஒரு படி அபபாற்பட்டது.

drift : விலகல் : ஒரு மின்சுற்றின் வெளியீட்டில் எற்படும் மாற்றம் மெதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும்.

dril down : துருவிச் செல்லுதல் : சுருக்கத் தரவுகளிலிருந்து அதை உருவாக்கிய விவரமான தரவுகளுக்கு ஆழமாகத் துருவிச் செல்லுதல்.

drill-and-practice programme : துருவிப் பழகும் செயல்முறை :