பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fiber - optic cable

580

field data


fiber - optic cable : ஒளியிழைத் தொகுப்பு : பெருமளவுத் தரவுகளை ஒளியின் வேகத்தில் கொண்டு செல்லக்கூடிய, நுண்ணிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் இழைகளினாலான தரவு அனுப்பீட்டு ஊடகம்.

fiber optics : ஒளி இழைகள் : ஒளியின் வேகத்தில் அதிக எண்ணிக்கைகளில் தரவுகளை அனுப்பக்கூடிய கண்ணாடி அல்லது செயற்கை நுண் இழைகளின் ஊடக தரவு அனுப்பல் முறை.

fibonacci numbers : ஃ பைபோன் ACCI எண்கள் : முந்திய இரு எண்களின் கூட்டுத்தொகையாக (1, 1, 2, 3, 5, 8, 13 என்று இருக்கும் வகையில்) ஒவ்வொரு எண்ணும் இருக்கிற முழுஎண்களின் வரிசை. தேடுதலை இரு கீழின எண்களாகப் பகுக்கிற ஈரிலக்கத் தேடுதல்களை இது விரைவுபடுத்துகிறது.

fibonacci search : ஃபைபோன் ACCI தேடுதல் ; ஃபைபோன் ACCI எண்களைப் பயன்படுத்தும் ஒரு தேடுதல் படிநிலை வரிசை. இது ஈரிலக்கத் தேடுதலில் இரண்டின் வர்க்கங்களைப் பயன்படுத்துவது போன்றதாகும்.

fiche : படத்தாள்; நுண்படத்தாள் : பல்வகை நுண் தோற்றங்களை உள்ளடக்கிய ஒளிப்படத் தாள்.

fidoNet : ஃபைடோனெட் : டாம் ஜென்னிங்ஸ் என்பவர் 1984இல் உருவாக்கிய ஃபைடோ BBS என்பதிலிருந்து தோன்றிய மின்னணுவியல் அஞ்சல் மரபுத் தொகுதி. 10, 000-க்கும் அதிகமான ஃபைடோனெட் மையமுனைகள் பயன்பாட்டில் உள்ளன.

field புலம் : தரவுத் தள மேலாண்மை அமைப்பு கையாளும் மிகச்சிறிய அலகாகிய தரவுவின் ஒரு துண்டு. பணியாளர் கோப்பில், ஒரு நபரின் பெயர், வயது ஆகிய இரண்டும் இரண்டு தனித்தனி புலங்களாகக் கருதப்படும். ஒன்று அல்லது மேற்பட்ட புலங்களைக் கொண்டதே பதிவேடு.

Fjeld Alterable Control Element (FACE) : புலம் மாற்றக்கூடிய கட்டுப்பாட்டு அலகு : பயனாளர் நுண் நிரலாக்கத் தொடர் எழுத வழிவகுக்கும் சில அமைப்புகளில் உள்ள சிப்பு.

field - based search : புலம் சார் தேடல்

field, card : அட்டைப்புலம் .

field data : புல தரவுக் குறியீடு : மாறுபடும் உற்பத்தியாளர் குறி