பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

field/record

582

file


நிறுவும் நேரத்தில் நிரலாக்கம் செய்யலாம். இத்தகைய நிரலாக்கத்தை ஒரேயொருமுறை மட்டும் செய்யமுடியும். சிப்புவின் இணைப்புகளிடையே மிக அதிக மின்சாரத்தை செலுத்தி இத்தகைய நிரலாக்கத்தைச் செய்வர்.

field/record : புலம் /ஏடு.

field separator : புலப்பிரிப்பி : ஒரு பதிவேட்டில் புலங்களைப் பிரித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு காற்புள்ளி, அரைப்புள்ளி அல்லது முக்காற்புள்ளியாக இருக்கலாம்.

field size : புல அளவு .

field squeeze : புலப் பிழிவுக் கருவி : ஒர் அஞ்சல் இணைப்பியில், ஒரு தரவு புலத்தில் கூடுதலான காலியிடங்களை அகற்றி, எழுத்து வாசகத்தினுள் துல்லியமாக அச்சிடும்படி செய்யும் ஒரு செயற்பணி.

field, updatable : மாற்றத்தகு புலம் .

field upgradable : களத்தில் மேம்படுத்தக்கூடிய வன்பொருள் : வழங்கப்பட்ட பிறகு கணினி கிடங்கிலோ அல்லது பழுது பார்க்கும் மையத்திலோ அல்லது ஒருவரது அலுவலகத்திலோ, இத்தகைய களத்தில் மேம்படுத்தக் கூடியது.

FΙFΟ : எஃப்ஐ எஃப்ஓ ; First in First Out என்பதன் சுருக்கம். ஒரு பட்டியலில் பொருள்களைச் சேமிக்கவும் திரும்பப் பெறவுமான முறை. காத்திருப்போர் வரிசையில் (கியூவில்) முதலில் வந்தவர் முதலில் கவனிக்கப்பட்டு அனுப்பப்படுவார்.

field, variable : மாறுபுலம் .

fifth generation computers : ஐந்தாம் தலைமுறைக் கணினிகள் : அடுத்த கணினி வளர்ச்சி நிலை, ஒலி உள்ளீடு/வெளியீடு செயற்கை நுண்ணறிவு, காரண காரியமறிந்து, பகுத்தறிந்து, முடிவெடுக்கக்கூடிய எந்திரங்களை உருவாக்கும் தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

figure : உரு.

figure shift : எண் மாற்றம் : விசைப் பலகையின் ஒரு விசை அல்லது விசை உருவாக்கும் குறியீடு, செய்தியில் மாற்று வரும் வரை அடுத்து வரும் எழுத்துகளை எண்களாகக் கருத வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

file : கோப்பு : தரவுத் தொகுப்பு : ஒரு அடிப்படை சேமிப்பு

அலகாகக் கருதப்படும், தொடர்புடைய பதிவுகளின் தொகுதி.