பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

floating point register

606

floppy disk controller


மிதவை முனைச் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு வடிவமைக்கப் பட்டுள்ள கணித அலகு. இது, ஒரு சொந்தக் கணினியில் ஒரு இணைச் செய் முறைப்படுத்தியாக இருக்கலாம். இதனை, முதன்மைக் கணினியுடன் இணைக்கப்படு கிற ஒரு வரிசைச் செய்முறைப் படுத்தி என்றும் அழைப்பர்.

floating point register : மிதவைப் புள்ளியெண் பதிவகம் : கணினியில் மிதவைப் புள்ளி எண் மதிப்புகளை இருத்தி வைக்க வடிவமைக்கப்பட்ட பதிவகம்.

floating point representation : மிதவைப் புள்ளி உருவகிப்பு.

floating-point routine : மிதக்கும் புள்ளி வழக்கச் செயல்;மிதவைப் புள்ளி வாலாயம் : வழக்கச் செயல்களின் தொகுதி. மிதக்கும் புள்ளி வன்பொருள் இல்லாமல் செய்யப்படும் கணினியில், மிதக்கும் புள்ளி இயக்கத்தைச் செய்ய வல்லது.

floating point type : மிதவைப் புள்ளி வகை.

FLOP : ஃப்ளாப் : Floating Point Operation என்பதன் குறும்பெயர்.

floppy disk : நெகிழ் வட்டு;மென் வட்டு;செருகு வட்டு : வளையக்கூடிய வட்டு. காகித அல்லது பிளாஸ்டிக் உறைகளில் வைக்கப்படும் ஆக்சைடு பூசப்பட்ட வட்ட மைலார் வட்டு. உறையோடு வட்டு இயக்கியில் உள்ளே நுழைக்கப்படும். சிறு கணினி, நுண்கணினிகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுவது. குறைந்த சேமிப்புத் திறனும், குறைந்த விலையும் அதே அளவு குறைந்த தகவல் பரிமாற்ற விகிதமும் உள்ளது. வழக்கமான ஃபிளாப்பி வட்டுகள் 20. 32 செ. மீ. குறுக்களவுள்ளன. சிறு ஃபிளாப்பி வட்டுகள். 13. 3. செ. மீ (5 1/4 அங்) குறுக்களவுள்ளவை. நுண் ஃபிளாப்பிகள் 9. செ. மீ (3 1/2) அங்.) -க்கும் குறைவான குறுக்களவுடன் வருகின்றன. பார்க்க magnetic disk, diskete, hard disk-க்கு எதிர்ச் சொல்.

floppy disk case : நெகிழ்வட்டுப் பெட்டி;மென் வட்டு உறை : ஃபிளாப்பி வட்டுகளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டி. பொதுவாக பிளாஸ்டிக்கினால் செய்யப்படும்.

floppy disk controller : நெகிழ்வட்டு கட்டுப்பாட்டுப் பொறி;மென் வட்டுக் கட்டுப்படுத்தி : மென்வட்டு இயக்கியைக் கட்டுப்படுத்தும் மின்சுற்று அட்டை அல்லது சிப்பு.