பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

foot print

614

foreground/background


அமைந்துள்ள வாசகம். இது பெரும்பாலும் தரவுக்கான ஆதாரத்தைக் குறிக்கும். இவற்றை ஒன்று சேர்த்து ஒர் ஆவணத்தின் இறுதியில் அச்சிட்டால், இவை 'இறுதிக் குறிப்புகள்' (End notes) எனப்படும்.

foot print : கால் தடம்;அடிச் சுவடு : ஒரு கருவிக்குத் தேவையான தரைப் பகுதியின் வடிவமும், பரப்பும்.

for : சார்பு : ஒரு நிரலாக்கத் தொடரில் கட்டுப்பாட்டுக் கட்டமைவில், குறிப்பிட்ட கட்டளைகளின் தொகுதி எந்த அளவுக்குத் திரும்ப நிறை வேற்றப்படும் என்பதைக் குறித்துரைக்கிற முதல் அறிக்கை.

force : 1. கட்டாயப்படுத்து : ஒரு நிரலாக்கத் தொடரின் நடுவில் மனிதர் தலையிட்டு தாண்டு நிரலைச் செயல்படுத்துவது.

force : 2. விசைவலியச் செய்;வல்லந்தமாக : சோஃப்கோ என்ற அமைவனம் தயாரித்துள்ள தரவுதளத் தொகுப்பி. இதில்"C"மற்றும் dBase கட்டமைவுகள் இணைந்துள்ளன. இது மிகச்சிறிய, நிறை வேற்றத்தக்க செயல்முறைகளை உருவாக்குவதற்குப் புகழ் பெற்றது.

forced page break : வலிந்தபக்கப் பிளவு : பயனாளர் வலிந்து புகுத்திய ஒரு பக்கப் பிளவு.

forecast : வருவதுரை;முன் கணிப்பு : கடந்த காலத்தை ஒட்டி வருங்காலத்தினைக் கணித்துக் கூறல், அனுமானமாகச் சொல்லாமல் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு புதியதாக்க சக்திகளையும், மாற்றங்களையும் உள்ளடக்கியவாறு எதிர்காலத்தை மதிப்பிட்டு தெளிவாகக் கணித்தல்.

fore casting : முன் கணித்தல்.

foreground/background : முன்புறம்/பின்புறம்;முன்புலம்/பின்புலம்; முன்னணி/பின்னணி : ஒரு பன்முகப் பணிச் சூழலில் செயல்முறைகளை இயக்கு வதற்குக் குறித்தளிக்கப் பட்டுள்ள முந்துரிமை. முன்புறச் செயல்முறைகள், மிக உயர்ந்த முந்துரிமையைக் கொண்டவை. பின்புறச் செயல் முறைகள், மிகக்குறைந்த முந்துரிமை கொண்டவை. ஒரு சொந்தக் கணினியில் முன்புறச் செயல்முறை என்பது, பயனாளர் தற்போது கையாளும் செயல்முறை;பின்புறச் செயல் முறை என்பது, ஒர் அச்சு உருளை அல்லது செய்தித் தொடர்பு செயல்முறை.