பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

game software

640

garbage


game software : விளையாட்டு மென்பொருள்.

games : விளையாட்டுகள்.

games theory : விளையாட்டுத் தேற்றம் : விளையாட்டுக் கொள்கை : விளையாட்டுக் கோட்பாடு;நிகழ்தகவு (Probability) தொடர்பான கணிதவியலின் ஒரு பிரிவு. ஒரு விளையாட்டுத் தந்திரத்தைக் கொண்டிருக்கிற ஓர் எதிராளியை எதிர்கொள்வதற்குப் பெரிதும் உகந்த ஓர் தந்திரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கணிதச் செய்முறை. இந்தச் சொல்லை 1928இல் முதன்முதலாக ஜான் வான் நியூமென் பயன்படுத்தினார். கணினி வரைகலையில் கண்ணுக்கு ஒரே மாதிரியாகப் புலனாகக்கூடிய பல்வேறு செறிவுகளைத் தரக்கூடிய ஒரு சூத்திரம்.

gamut : வண்ணக்களம் : கணினி காட்சித்திரையில் காட்டக் கூடிய மொத்த வண்ணங்களின் வரிசை.

'gang punch : குழு துளை : துளையிடும் அட்டைகளின் குழுவிலுள்ள அனைத்து அட்டைகளுக்கும் ஒரே மாதிரியான அல்லது நிலையான தகவலைத் துளையிடுவது.

gantt chart : கேன்ட் வரைபடம் : பணிகள் அல்லது நடவடிக்கைகளின் ஆரம்பம் மற்றும் முடிவு முனைகளைக் குறிப்பிட நேர அடிப்படையில் பட்டைக் கோடு அல்லது அம்புக்குறி மூலம் குறிப்பிடும் வரைபடம். ஒரு திட்டத்தின் குறிப்பிட்ட காலக்கெடு அல்லது சாதனைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

gap : இடைவெளி : கோப்பு இடைவெளிபோல் அல்லாது இரண்டு பதிவேடுகள் அல்லது தரவு தொகுதிகளுக்கு இடையிலுள்ள மின்காந்த நினைவக இடைவெளியைக் குறிப்பிடுவது.

gap, interback : தொகுப்பு இடைவெளி.

gapless : இடைவெளியின்மை : ஒரு தொடர்ச்சியான விசையோட்டத்தில் இடைத்தடை இடைவெளிகள் இல்லாமல் பதிவு செய்யக்கூடிய காந்தநாடா.

garbage : குப்பை : 1. தரவு நுழைவின் தவறுகள் அல்லது கணினி நிரலாக்கத்தொடரின் பிழைகள் அல்லது எந்திரக்கோளாறு போன்றவற்றின் காரணமாக கணினி நிரலாக்கத் தொடரின் மூலம் ஏற்படும் சரியல்லாத விடைகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல். 2. இருப்பகத்திற்குக்