பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hanging indent

677

hard copy


விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளி வரு வதற்கான ஒரே வழி கணினியை நிறுத்திப்பின் திரும்ப இயக்குதல் (Boot) ஆகும்.

hanging indent : தொங்கல் வரிப்பத்தி : ஒரு பத்தியிடும் முறை. இதில், முழு அளவு முதல் வரியும், உள்ளடங்கிய அடுத்த வரிகளும் அடங்கியிருக்கும்.

hanging paragraph : தொங்கல் பத்தி : அச்சுக்கலையில் முதல் வரி இடது ஒரத்திலிருந்து தொடங்கி, இரண்டாவது வரி யும், பின்வரும் வரிகளும் உள் ளடங்கியதாகவும் இருக்கும் வாசகப் பத்தி அமைப்பு.

hang - பp : தொங்க வை : தொங்கல் : ஒரு வாலாயமாக (ரொட்டீன்) நிரலாக்கத்தொடர் அமைக்கப்படாத நிறுத்தம். சிக்கலைச் சரியாகக் குறியீடு செய்யாத தாலோ, எந்திரக் கோளாறாலோ அல்லது சட்டவிரோதமான அல்லது இல்லாத குறியீட்டைப் பயன்படுத்துவதாலோ விரும் பத் தகாத அல்லது எதிர்பாராத ஒரு நிறுத்தம்.

hard card : வன் அட்டை : சொந்தக் கணினியில், ஒரு நிலை வட்டினைக் கொண்டிருக்கிற ஒரு செருகு அட்டை வடிவிலுள்ள துணைநிலை நினைவகம். ஒரு வன்அட்டை 20-40 MB திறம்பாடு உடையது. ஒரு கணினி நினைவகத்தில் விரை வாக விரிவாக்கம் பெறுவதற்கு இது பயனுள்ள வழி.

hard clip area : தாளின் வரை பரப்பு : ஒரு இலக்கவியல் வரைவியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கோடு போகாத நிலை.

hard coded : நிலைக் குறியீடு : ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே கொண்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளைச் செய்கிற மென்பொருள். எடுத்துக்காட்டு : வேறு எந்த, வகைகளையும் அனுமதிக்காமல், இரண்டு வகை அச்சடிப்பி களால் மட்டுமே ஒரு செயல் முறையை எழுதுதல். சிக்கல் களுக்கான நிலைக்குறியீட்டுத் தீர்வுகள் பெரும்பாலும் துரித மானவை. ஆனால், இவை எதிர் கால நெகிழ்திறனை அனுமதிப் பதில்லை.

hard configuration : வன் தகவமைவு.

hard contact : வன் தொடர்பு அச்சுமுறை : தேவையான அழுத்தத்துடன் அழுத்தி தொடர்பு முறையில் அச்சிடுவது.

hard copy : உண்மை நகல்; தாள் படி அச்சு நகல் : அறிக்கைகள்,