பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

analysis, cost

71

anchor



பாய்வு என்பது, பொதுவாக தொடர்வரிசைக் கட்டுப்பாடு, பிழைக் கட்டுப்பாடு மற்றும் திறன் மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஒரு சிக்கலை எளிதாக எதிர் கொள்ளும் பொருட்டு அதனை சிறுசிறு கூறுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்வது வழக்கமான நடைமுறை ஆகும்.


analysis, cost : செலவுப் பகுப்பாய்வு.


analysis, system : முறைமை பகுப்பாய்வு.


analyst : பகுப்பாய்வாளர் : பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதற்கான உத்திகளை உருவாக்குகிற, அதனை வரையறை செய்கிறதிறனுள்ள நபர். குறிப்பாக கணினி ஒன்றில் தீர்வுக்கான உத்திகளை வகுப்பவர்.


analyst/designer work bench : பகுப்பாய்வாளர்/வடிவமைப்பாளர் பணி இருக்கை.


analyst, programmer : நிரல் பகுப்பாய்வாளர்.


analyst, system : முறைமை பகுப்பாய்வாளர்.


Analytical Engine பகுப்பாய்வுக் கருவி; பகுப்பாய்வுப் பொறி : கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்க 1800களின் மத்தியில் பிரிட்டன் கணிதவியலாளரான சார்லஸ் பாபேஜ் என்பவர் கண்டுபிடித்த கருவி. நவீன இலக்கமுறை கணினியின் முன்னோடி.


analytical graphics : பகுப்பாய்வு வரைகலை : பாரம்பரிய வரி வரைபடங்கள், மற்றும் பட்டை வரைபடங்களைக் கொண்டு தரவுகளை ஆராய்தல், விரிதாள், தரவுத் தளம் அல்லது சொல் செயலி தொகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள வரைகலை.


analytical machine : பகுப்பாய்வு எந்திரம்.


analyze : பகுப்பாய்


ancestral file : முந்தையக் கோப்பு : கோப்பில் உள்ள தரவு தொலைந்து போகும் அல்லது சிதைந்து போகும் என்ற எச்சரிக் கையினால் முந்தைய கோப்பு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ஒரு கோப்பின் மூன்று பிரதிகள் வைக்கப்பட வேண்டும். தாத்தா, தந்தை, குழந்தை. சமீபத்தியதைப் பயன் படுத்துவது குழந்தைக் கோப்பாகும். குழந்தைக்குச் சேதமானால் தந்தை கோப்பையும், அதுவும் சேதமானால் தாத்தா கோப்பையும் தேடி எடுத்து பயன்படுத்தலாம்.


anchor : நங்கூரம்