பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Information science

746

Information theory


பட்ட பெயர். தகவல் புரட்சி, கணினிப் புரட்சி என்றும் சில நேரங்களில் அழைக்கப்படுகிறது.

Information science : தகவல் அறிவியல்; தகவலியல் : எல்லாவகையான தகவலையும் மக்கள் எப்படி உருவாக்குகிறார்கள், பயன்படுத்துகிறார்கள் மற்றும் மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள் என்பது பற்றிய ஆய்வு.

information services : தகவல் பணிகள் : விரிவான தகவல் அடிப்படை பல்வேறு வகையான பணிகளுக்கு வகை செய்கிறது. எடுத்துக்காட்டாக விமானப் பயணப்பதிவு, பங்குச்சந்தை விலை விவரங்கள்.

information storage : தகவல் சேமிப்பகம்; தகவல் களஞ்சியம்.

information storage and retrieval : தகவல் சேமிப்பும் மீட்பும்.

information super highway : தகவல் நீள் நெடுஞ்சாலை : தனியார் பிணையங்கள், நிகழ்நிலைச் சேவைகள் மற்றும் இது போன்ற தகவல் போக்குவரத்தினை உள்ளடக்கிய, தற்போதுள்ள இணையம் மற்றும் அதன் பொதுக்கட்டமைப்புகளையும் குறிப்பது.

Information system : தகவல் முறைமை; தகவல் அமைப்பு : ஊழியர், நடைமுறைகள் மற்றும் கருவிகள் சேகரிப்பு, தகவல்களைச் சேகரிக்க, பதிவு செய்ய, வகைப்படுத்த, சேமிக்க, மீண்டும் பெற, வெளிக்காட்ட வடிவமைக்கப்பட்டது, இயக்கப்படுகிறது மற்றும் பராமரிக்கப் படுகிறது.

information system, management : மேலாண்மை தகவல் முறைமை.

Information system specialist : தகவல் அமைப்பு வல்லுநர் : கணினி தொழில் அல்லது கணினி பயன்படுத்தும் நிறுவனத்தில் கணினி சேவைகளைக் கொடுப்பது தொடர்பான தொழிலில் உள்ள நபர்.

Information technology : தகவல் தொழில்நுட்பம் : தகவல்கள் ஒலி, படங்களைக் கொண்டு செல்லும் உயர்வேகத் தகவல் தொடர்பு இணைப்புகளையும் கணினி முறைமையையும் இணைத்தல்.

information Technology Act : மின்வெளிச் சட்டம்; தகவல் தொழில் நுட்பச் சட்டம்.

Information Technology Manager : தகவல் தொழில்நுட்ப மேலாளர்.

Information Technology Project Manager : தகவல் தொழில்நுட்பத் திட்ட மேலாளர்.

Information theory : தகவல் கொள்கை : தகவல் பரிமாற்றம்,