பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Java script

804

Jet Set willy


 மேலாண்மை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்; ஜாவா மேலாண்மை பீஐ : பயன்பாட்டு நிரலாக்க இடை முகத்துக்கான வரையறுப்புகளின் தொகுப்பு. பிணைய மேலாண்மைக்கு, ஜாவா மொழியை ஏதுவாக்க சன் மைக்ரோசிஸ்டம்ஸ் இவ்வரையறுப்புகளை முன்வைத்துள்ளது.

Java Script : ஜாவா ஸ்கிரிப்ட் : ஒரு கணினி உரைநிரல் மொழி. இணையப் பக்கங்களை சிறந்த முறையில் வடிவமைக்கப்படுகிறது. நெட்ஸ்கேப் நிறுவனம் உருவாக்கியது.

Java Soft : ஜாவா சாஃப்ட் : ஒரு கணினி நிறுவனம்.

java terminal : ஜாவா முனையம் : இணையத்தில் இணைத்து இயக்குவதற்கென்றே குறை வான சாதனங்களுடன் உரு வாக்கப்பட்ட ஒரு வகை சொந்தக் கணினி. ஜாவா குறு நிரல்களை பதிவிறக்கம் செய்து இயக்க வல்லவை. இக்கணினிகளில் வட்டுச் சேமிப்பகங்கள் கிடையா. நிறுவப்பட்ட நிரல்களும் கிடையா. எத்தகைய பயன்பாட்டு நிரல்களையும் பிணையத்திலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொள்ளும். தேவையான நிரல்களை ஒரு கணினியில் மையப்படுத்தி சேமித்து வைத்து, இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொள்வதனால் செலவு குறைவாகிறது. அதேவேளை, ஒவ்வொரு நிரலையும் இறக்குமதி செய்து பயன்படுத்துவதால் சிறிது காலத்தாழ்வு தவிர்க்க முடியாதது. சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஜாவா முனையங்களை விரைவில் வெளியிட எண்ணியுள்ளது. பிணைய பீசியை ஒத்தவை ஜாவா முனையங்கள்.

Javelin Plus : ஜாவ்லின் பிளஸ் : இன்ஃபர்மேஷன் ரிசோர்சஸ் நிறுவனம் உருவாக்கிய பீசி விரிதாள் நிரலாக்கத் தொடர் வரிசை, பத்தி எண்களுக்குப் பதிலாக பெயர்களைப் பயன் படுத்தி அறைகளை அடையாளம் காணவும், தரவுகளைத் தொகுக்கவும் செய்கிறது.

JCL : ஜெசிஎல் : Job control language என்பதன் குறும்பெயர்.

JDK : ஜாவா மென்பொருள் உருவாக்கக் கருவித் தொகுதி

jerk : குலுக்கம்.

JES : ஜெஇஎஸ் : Job entry system என்பதன் குறும்பெயர். செய்து முடிப்பதற்காக வேலை களையும் பட்டியல்களையும், ஏற்றுக் கொள்ளும் இயக்க அமைப்பில் ஒரு பங்கு.

Jet set willy : ஜெட் செட் வில்லி : ஸ்பெக்ட்ரம் ஹோம்