பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Apple computers

80

Apple Extended Keyboard


அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் எட்டு விரிவாக்கச் செருகுவாய்கள் (expansion slots) இருந்தன.

Apple computers : ஆப்பிள் கணினிகள் : தனிநபர், கல்வி, வணிகம் மற்றும் மேசைக்கணினி வழி நூல் பதிப்பகப் பயன்பாடுகளில் அதிகம் பயன்படும் நுண் கணினிகள்.

AppieDraw : ஆப்பிள் டிரா : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் செயல்படக் கூடிய படம் வரையப் பயன்படும் ஒரு பகிர்வு மென்பொருள் (shareware) தொகுப்பு.

Apple Events : ஆப்பிள் நிகழ்வுகள் : ஆப்பிள் மேக் ஓஎஸ் சிஸ்டம் 7 இயக்க முறைமையில் சேர்க்கப்பட்ட ஒரு பயன்பாடு. இதன் மூலம் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலிருந்து இன்னொரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு சேமி, திற, மூடு போன்ற கட்டளைகளை அனுப்ப முடியும்.

Apple Extended Keyboard : நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப் பலகை : பிற்காலத்தில் வெளியிடப்பட்ட ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினிகளில் (ஆப்பிள் எஸ்இ, மெக்கின்டோஷ் II, ஆப்பிள் II ஜிஎஸ்) பயன்படுத்தப்படும், 105 விசைகள் உள்ள விசைப் பலகை, ஐபிஎம் மற்றும் அதன் ஒத்தியல் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட விசைப் பலகையில் இருப்பது போன்று ஆப்பிள் விசைப் பலகையில் இல்லையே என்ற குறையை நிறைவுசெய்ய, இந்த விசைப்

நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப் பலகை