பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

language

829

language statement


அவை பிரதிபலிக்கும் இடங்களின் உறவைக் குறிப்பது.

language : மொழி : தகவலை வெளிப்படுத்தப் பயன்படும் விதிகள், குறியீடுகள், மரபுகளின் தொகுதி.

language access : மொழி அணுகல் : ஐ. பி. எம். நிறுவனத்தில் எஸ்ஏஏ ஏற்புடை கேள்வி மொழி. ஆங்கில மொழியில் கேட்கப்படும் கேள்வியை எஸ்கியூஎல் மொழியாக மாற்றி கியூ. எம். எஃப் ஆக அளிக்கிறது. கியூ. எம்எஃப் தரவுகளைத் தேடித் தருகிறது.

language and script : மொழியும் வரிவடிவும்.

language, assembly : தொகுப்பு மொழி;சில்லுமொழி; சிப்புமொழி.

language, basic : அடிப்படை மொழி.

language checker : மொழிச் சரி பார்ப்பி; மொழி திருத்தி.

Language, Common Business oriented : பொதுத் தொழில் சார்ந்த மொழி. COBOL மொழியின் விரிவாக்கப் பெயர்.

language description language : மொழி விவரிப்பு மொழி.

language, high level : உயர்நிலைமொழி.

language independent platform : மொழிசாராப் பணித்தளம்.

language, low level : அடிநிலை மொழி.

language, machine : பொறி மொழி.

language, object : இலக்கு மொழி.

language processor : மொழி செயலாக்கி; மொழி அலசி : மனிதன் எழுதும் மூல்மொழி நிரலாக்கத் தொடர்களை கணினி இயக்கக்கூடிய வடிவில் மொழிபெயர்க்கும் நிரலாக்கத்தொடர். பொதுவாக மொழி செயலாக்கிகள் மூன்று வகை. தொகுப்பிகள், சேர்ப்பிகள் மற்றும் மொழி பெயர்ப்பிகள்.

language prompt மொழி உணர்த்தி.

language, query : வினவு மொழி.

language, source : ஆதாரமொழி ; மூலமொழி

language statement : மொழி விவர அறிவிப்பு : மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும்