பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/888

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

magnetic bubble memory

887

magnetic core


அல்லது காந்தத்தால் இயக்கப் படுகிறது.

magnetic bubble memory : காந்தக் குமிழ் நினைவகம் : நகரும் காந்தக் குமிழ்களைப் பயன்படுத்தும் நினைவு. குமிழ்கள் என்பது காந்த மேற்றப்பட்ட பகுதிகள். காந்தப் பொருளில் - அதாவது ஆர்த்தோ ஃபெரைட் போன்ற பொருளில் நகரக்கூடியது. காந்தப்பொருளின் உள்ளேயும் வெளியேயும் தோன்றும் காந்தக் குமிழ்களைக் கட்டுப்படுத்து வது. அதன் விளைவாக உயர் திறன் உள்ள நினைவை உருவாக்க முடியும். ஆண்ட்ரூ போபெக், ரிச்சர்டு ஹெர்வுட், அம்பெர்டோ ஜியானோலா, பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷாக்லி ஆகியோர் காந்தக் குமிழ் நினைவைக் கண்டு பிடித்தார்கள். ஒரு சதுர அங்குலத்துக்கு 50 இலட்சம் துண்மிகள் திறனைக் கொண்ட சேமிப்பகத்தை உருவாக் கினார்கள். magnetic bubbles : காந்தக் குமிழ்கள் : தளத்துக்கு எதிரான மின்காந்தப் பண்புள்ள வட்ட வடிவ மின்காந்தப் பரப்புகள். அவற்றைத் தூண்டல் கட்டுப் பாடுள்ள மின் முனைகளால் தளத்தில் இடம் விட்டு இடம் பெயரச் செய்யலாம். பொருத்த மான சிறிய வட்டவடிவப் பகுதிகள் அல்லது குமிழ்கள்.

magnetic card : காந்த அட்டை : தட்டு அல்லது காந்தப் பூச்சு உள்ள அட்டைகளைக் கொண்ட சிறு பெட்டி. அட்டைகள் காந்த நாடாவைப் போன்ற பொரு ளால் உருவாக்கப்பட்டவை. காந்த நாடா சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு ஒன்றின் அரு கில் பிளாஸ்டிக் அட்டை ஒன்றில் அடுக்கப்பட்டு சிறிய பெட்டியில் அடுக்கப்பட்டிருப் பதாக உருவகம் செய்யலாம்.

magnetic cartridge : காந்தப் பொதியுறை.

magnetic cell : காந்தக் கலம்.

magnetic characters : காந்த எழுத்துரு : எழுத்துகளின் தொகுப்பு. காசோலைகள், காப்பீட்டுக் கட்டணங்கள், பயன்பாட்டு கட்டணச் சீட்டு கள், செலவுச் சீட்டுகள் மற்றும் பிறவற்றில் பயன்படுகிறது. அவை எழுத்துகளைப் படிக்கும் சாதனங்களான எம்ஐசி ஆர் படிப்புக் கருவிகள் தாமாக எழுத்துகளைப் படிக்க இட மளிக்கின்றன.

magnetic core : காந்த அச்சு : காந்த உள் மையம்; காந்த வளையம் : குறும் கொட்டை வடி