பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/902

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mancos

901

manual input


தேவைப்படும் நேரத்தை இரண்டு சுழற்சிகளாக இது பிரிக்கிறது. முதல் சுழற்சி தரவு மதிப்பினையும், (0 அல்லது 1) இரண்டாவது சுழற்சி எதிர்நிலைக்கு மாற்றி நேரத்தையும் அளிக்கிறது.

mancos : மான்கோஸ் : பி. சி. க்களுக்கான சக்தி மிக்க, முழுமையான மேலாண்மைக் கட்டுப்பாட்டு அமைப்பு. உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் தேவைகளை இது கவனிக்கிறது.

Maniac : மேனியாக் : வான் நியூமென்னால் உருவாக்கப்பட்ட சொல். ஹைட்ரஜன் குண்டினை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இராட்சத கணினி.

manipulating : முனைப்படுத்துதல் ; கையாள்தல் : பயன்படுத்துவோருக்கு கூடுதல் பொருள் உள்ள வடிவில் தரவுகளைக் கையாளும் பணி.

manipulation instruction, data : தரவு முனைப்படுத்தல் ஆணை; தரவு கையாள்தல் ஆணை.

man-machine interface : மனித எந்திர இடையிணைப்பு.

manpower loading chart : மனிதசக்தியை ஏற்றும் பட்டியல்; பணியாளர் பயன்பாட்டு வரைவு : கால அடிப்படையில் தொழிலாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதைக் காட்டும் பட்டியல்.

mantissa : அடி எண் மடக்கையின் பதின்மக் கூறு : 0. 64321 x 103 64321 இல் மிதவைப் புள்ளி எண்களைக் குறிப்பிடும் பகுதி எண்.

manual : கை நூல்; செயல் விளக்க நூல்.

manual data processing : மனிதர் மூலமான தரவு செயலாக்கம் : தொடர்ச்சியான மனித இயக்கமும் தலையீடும் தேவைப்படும் தரவு செயலாக்கம். காகிதப்படிவங்கள், பென்சில்கள் நிரப்பும் பெட்டிகள் போன்ற எளிய தரவு செயலாக்கக் கருவிகளை இது பயன்படுத்துகின்றது. தட்டச்சுப் பொறிகள், கணிப்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்தினாலும்கூட எல்லா தரவு செயலாக்கங்களும் தானியங்கியானவை என்று சொல்ல முடியாது.

manual device : கையாள் இயக்கும் சாதனம்.

manual input : கைமுறை உள்ளீடு; இயக்க உள்ளீடு : திருத்த, பணியைத் தொடர, கணினி நிரல் தொகுப்பு ஒன்றை வகைப்படுத்துவதைத் தொடர