பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/964

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

MS-DOS shell

963

ΜΤΤF



சூழலை வழங்கும் ஒரு செயல் தளம் (shell).


MS-DOS shell : எம்எஸ் டாஸ் செயல் தளம் : பயனாளர் எம்எஸ்டாஸ் இயக்க முறைமையில் அல்லது எம்எஸ் டாஸில் பாவிக்கும் பிற இயக்க முறைமைகளில் செயலாற்ற அனுமதிக்கும் ஒரு சூழல்.


MSDOS. SYS : எம்எஸ்டாஸ். சிஸ் : எம்எஸ்டாஸ் இயக்கத் தொடங்கு வட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இயக்க முறைமைக் கோப்புகளில் ஒன்று. இயக்க முறைமையின் கருவகமாய் (kernel) விளங்கும் மென் பொருள் இது.


MSI : எம்எஸ்ஐ : Medicum scale integration என்பதன் குறும் பெயர். நடுத்தர அளவு ஒருங்கிணைப்பு (Medium scale integration) என்பதன் சுருக்கம்.


MSSG : எம்எஸ்எஸ்ஜி : "செய்தி" என்று பொருள்படும் "Message" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.


. ms. us : . எம்எஸ். யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மிஸிலிப்பி மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


MSX : எம்எஸ்எக்ஸ் : மைக்ரோ சாப்ட் கழகம் (Microsoft Corporation) வகுத்துள்ள திட்ட அளவு. வீட்டுக் கணினி அங்காடியை ஒருங்கிணைப்பதற்காக ஜப்பானியர் இதனைப் பயன்படுத்துகிறார்கள். ஜப்பான் முழுவதும் எம்எஸ்எக்ஸ் பயன் படுத்தப்படுகிறது.


. mt : . எம். டீ : ஒர் இணைய தள முகவரி மால்ட்டா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.


MTBF : எம்டீபிஎஃப் : செயலறவுகளுக்கு இடையிலான சராசரி நேரத்தைக் குறிக்கும் "Mean time between failures" என்ற ஆங்கில சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். ஒரு பொறியமைவு அல்லது அமைப்பு செயலிழக்காமல் எவ்வளவு நேரம் செயற்படும் என எதிர்பார்க்கப்படும் சராசரி கால நீட்சி.


ΜΤΤΕ : எம்டீடிஎஃப் : செயலறவுக்கான சராசரி நேரத்தைக் குறிக்கும் "Mean time to failures" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பொறியமைவு அல்லது அமைப்பு குறைபாடின்றி செயற்படும் சராசரி கால நீட்சி.