பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

compressed SLIP

109

computer graphics


compressed SLIP : இறுகு ஸ்லிப் : ஸ்லிப் என்பது ஓர் இணைய நெறி முறை (Internet Protocol). இதன் ஒரு பதிப்பு இறுகு ஸ்லிப் எனப்படு கிறது. இணைய முகவரித் தகவலை இறுக்கிச் சுருக்கிப் பயன்படுத்து கிறது. இதன் காரணமாய் சாதாரண ஸ்லிப் நெறிமுறையைவிட இது வேகமாகச் செயல்படுகிறது.

compression : இறுக்குதல்; இறுக்கம்.

comprassion alogrithm : இறுக்கப் படி முறை.

compression technique : இறுக்கிச் சுருக்கும் நுட்பம்,

computational complexity : கணக்கிடல் உட்சிக்கல் நிலை.

computational linguistics : கணக்கிடல் மொழியியல்.

computational stylistics : கணக்கிடல் நடையியல்.

compute : கணக்கிடு; கணி.

computer abuse : கணினி கெடு வழக்கு.

computer-assisted learning : கணினி வழி கற்றல் : கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன் படுத்திக் கொள்ளுதல்.

computer, all purpose : அணைத்து பயன் கணினி,

computer, anolog : ஒத்திசைக் கணினி; தொடர்முறை கணினி.

computer assisted manufacturing (CAM) : கணினி உதவி உற்பத்தி.

computer, butfered : இடைத்தடுப்புக் கணினி.

computer control : கணினிக் கட்டுப்பாடு.

computer control console : கணினி கட்டுப்பாட்டு பணியகம்.

computer, digital : இலக்கமுறைக் கணினி,

computer errors : கணினிப் பிழைகள்.

computer family : கணினிக் குடும்பம்: ஒரே வகையான நுண்செயலிகளை யோ, ஒரே வடிவமைப்பிலமைந்த நுண் செயலிகளையோ கொண்ட கணினிக்குழுக்களைக் குறிக்கும் சொல். (எ-டு) ஆப்பிள் குடும்பக் கணினிகள் மெக்கின்டோஷ் என்றழைக்கப்படுகின்றன. சுருக்க மாக மேக் எனப்படும் இவை மோட்டோரோலா 68000, 68020, 68030, 68040 ஆகிய நுண்செயலி களில் செயல்படுகின்றன. சில வேளை களில் அவை வேறு செயலிகளைப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு, (எ-டு) மேக் கணினிக் குடும்பத்தில் இப்போதெல்லாம் பவர்பீசி (PowerPC) நுண்செயலிகள் பயன் படுத்தப்படுகின்றன. இவை பவர் மேக் என்றழைக்கப்படுகின்றன.

computer, first generation : முதல் தலைமுறைக் கணினி,

computer fraud : கணினி ஏய்ப்பு ; கணினி மோசடி.

computer graphics : கணினி வரைகலை : தொடக்க காலத்தில் கணினித் திரைகளில் வெறும் எழுத்துகளையும் எண்களையுமே பார்க்க முடிந்தது. இப்போதெல் லாம் திரைகளில் படங்கள் பவனி வருகின்றன. இதற்கு கணினி வரை கலைத் தொழில்நுட்பமே காரணம். படங்களை உருவாக்குவது, திரையில் காட்டுவது, நிலையாகப் பதிந்து வைப்பது ஆகிய பணிகளுக் கான பல்வேறு வழிமுறைகளை