பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diacritical mark

139

DIB


ஐபிஎம் நிறுவனத்தின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (Systems Network Architecture-SNA) ஆவணப் பரிமாற்றம் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள். வெவ்வேறு வகைக் கணினிகளுக்கிடையே அனுப்பி வைப்பதற்கு ஆவணங்களை ஒழுங்குபடுத்தி முகவரியிடும் வழி முறைகளை டயா வரையறுத்துள்ளது.

diacritical mark : பிரித்தறி குறியீடு; ஒலிபிரித்தறி அடையாளம் : ஓர் எழுத்தின் மேலே அல்லது கீழே அல்லது நடுவே, உச்சரிப்பை வேறு படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு. எடுப்போசை (acute) படுத்தல் மற்றும் ஒலியழுத்த (grave) குறியீடுகளாக பயன்படுகின்றன.

diagnosis : ஆய்ந்தறி.

diagnostic : ஆய்ந்தறிதல் ; பழுதறிதல்.

diagnostic programme : பழுதறி நிழல்.

diagnostic compiler : பழுதறி தொகுப்பி; பழுதறி மொழிமாற்றி :

diagram; block: தொகுதி வரைபடம்.

diagram, circuit : மின்சுற்று வரைபடம்.

diagram, flow : பாய்வு வரைபடம்.

diagram, network: பிணைவு வரைபடம்.

diagram, wiring: கம்பி சுற்று வரைபடம்.

dialing properties : எண் சுழற்று பண்புகள்.

dialogue management : உரையாடல் மேலாண்மை.

dialogue window : உரையாடல் சாளரம், சொல்லாடற் பலகணி.

dial-up : தொலைபேசிவழி, தொலை பேசி இணைப்பு மூலமாக : ஒரு பிணையக் கணினியுடன் பொதுத் தொலைபேசி வழியாக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் முறை. தனியான தடங்கள் மற்றும் ஏனைய தனியார் பிணையத் தொடர்புகள் மூலமாக ஏற்படுத்திக்கொள்ளும் இணைப்பிலிருந்து மாறுபட்டது.

dial up access : தொலைபேசிவழி அணுகல் : ஒரு தகவல் தொடர்புப் பிணையத்துடன், தொலைதொடர்புத் துறையினரின் தொலைபேசி வழியாக ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்பு.

dialup adapter : தொலைபேசிவழித் தகவி.

dial-up IP : தொரைபேசிவழி ஐபீ.

dial-up modem : தொலைபேசி மோடம்.

dial-up service : தொலைபேசி அணுகல் சேவை : உள்ளூர் அல்லது உலகளாவிய பொதுமக்களுக்கு தொலைபேசிச் சேவையை வழங்கி வரும் ஒரு நிறுவனம், இணையம் (Internet), அக இணையம் (Intranet) ஆகியவற்றை அணுகுவதற்கு வழங்கிவரும் சேவை. செய்திச் சேவைகளையும், பங்குச் சந்தை விவரங்களையும் அணுக இச்சேவை துணைபுரியும்.

dial-up networking : தொலைபேசி வழி பிணைப்பு: தொலைபேசி வழி இணைப்புப் பெறும் பிணையம்.

diary management : நாட்குறிப்பு பதிவு மேலாண்மை.

disaster recovery specialist : சேதமீட்புச் சிறப்பாளர்; இடர் மீட்சி வல்லுநர்.

DIB : டிப்; டிஐபி : 1. சாதனம் சாரா துண்மிப் படம் என்று பொருள்படும்