பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{LH|LEFT TEXT}FDM 184 ferromagnetic material


யறுப்புகள் இதில் அடங்கியுள்ளன. எஃப்.டி.டி.ஐ-l என்பது எஃப்.டி.டிஐ-ன் நீட்டித்த வடிவமாகும். நிகழ்நேரத் தகவல் பரிமாற்றத்தில் தொடர் முறைத் தகவலை இலக்கமுறைத் தகவல் வடிவத்தில் அனுப்புவதற் குரிய கூடுதலான வரையறுப்புகள் இதில் உள்ளன.

FDM : எஃப்டிஎம் : அலைப்பகிர்வுச் சேர்ப்புமுறை என்று பொருள்படும் Frequency Division Multiplexing group சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் சமிக்கைகளை வெவ்வேறு அலைவரிசைக்கு மாற்றிப்பின் அனைத்து அலைவரிசைகளையும் ஒற்றை அலைக் கற்றையாக்கி ஒரே தகவல் தடத்தில் அனுப்பிவைக்கும் முறை. அடிக்கற்றைப் (Baseband) பிணையங்களிலும், தொலைபேசி வழித் தகவல் தொடர்பிலும் தொடர் முறை (Analog) சமிக்கைப் பரி மாற்றத்திலும் எஃப்டிஎம் பயன்படு கிறது. எஃப்டிஎம் முறையில் தகவல் தடத்தின் அலைக்கற்றை சிறுசிறு கற்றையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கற்றையும் ஒரு தகவல் சமிக்கைகளை ஏந்திச் செல்லும்.

Federal Information Processing Standards : கூட்டரசின் தகவல் செயலாக்கத் தரங்கள் : அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்க அமைப்புகளுக்குள் நடைபெறும் தகவல் செயலாக்கத்திற்கான வழி காட்டுதல்களும் தொழில்நுட்ப வழி முறைகளும் அடங்கிய செந்தரக் கட்டுப்பாடு.

federal database : கூட்டிணைப்புத் தரவுத் தளம் : ஒரு குறிப்பிட்ட துறைபற்றிய அல்லது சிக்கல் பற்றிய தத்தம் கண்டுபிடிப்புகளையும் பட்டறிவையும் அறிவியல் அறிஞர் கள் சேமித்து வைத்துள்ள ஒரு தரவுத் தளம். ஒரு தனி மனிதரால் தீர்க்க முடியாத அல்லது தீர்ப்பதற்குக் கடினமான சிக்கல்களுக்குத் தேவை யான அறிவியல் கலந்தாய்வுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது கூட்டிணைப்புத் தரவுத் தளம்.

Federation of American Research Networks : அமெரிக்க ஆராய்ச்சிப் பிணையங்களின் கூட்டமைப்பு அமெரிக்க நாட்டிலுள்ள பிணையங் களின் இணைப்புத் தொழில்நுட்பக் குழுமங்களை ஒன்று சேர்த்து உரு வாக்கப்பட்ட ஒரு லாப நோக்கில்லா சங்கம். கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொடர்புடைய சமூகங்களிடையே பிணையங்களை ஒருங்கிணைப்பதை தேசிய அளவில் முக்கியமாக வலியுறுத்தும்.

Federation of Computing in the United States : அமெரிக்காவின் கணிப்பணிக் கூட்டமைப்பு : தகவல் செயலாக்கப் பன்னாட்டுக் கூட்டமைப்பில் (International Federation of Information Processing - IFIP) அமெரிக்க நாட்டின் பிரதிநிதி அமைப்பு.

feedback:நிலையறிதல்; பின்னூட்டம்.

feed, card : அட்டை செலுத்தம்.

feed, friction : & Tirujeu paru-L60, உராய்வு செலுத்தம்.

feed, horizantal கிடைமட்டச் செலுத்தம்.

feed, vertical செங்குத்துச் செலுத்தம்,

ferromagnetic material : இரும்பு காந்த ஆக்கப் பொருள்; நேர்காந்த ஆக்கப் பொருள்: மிகுகாந்தப் பண்பு