பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

functional units

201

FYI


உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நோக்கங்கள், நடவடிக்கைகளின் வகைகள் - இவற்றைப் பற்றிய ஒரு விளக்கம்.

functional units : செயல்படு உறுப்புகள்

function overloading : செயல்கூறு பணிமிகுப்பு : ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக்கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை , வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்கூறுகளின் வேறு பாடு அறியப்படும். அளபுருக்களின் வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் மொழிமாற்றி (compiler) சரியான செயல்கூறினை தானாகவே அடையாளம் கண்டு கொள்ளும். (எ-டு) sin{float). sin(Int) என்று இரண்டு செயல் கூறுகள் இருக்க முடியும். ஒன்று ஆரக்கோணத்தை யும் இன்னொன்று கோண மதிப்பை யும் ஏற்கும். sin (3.142/2.0) என்பது sin(x/2) என்பதால் 1.0 என்ற விடை கிடைக்கும். sin(45) என்பது 0.5 என்ற விடையைத் தரும். பொருள்நோக்கு நிரலாக்க (Object Oriented Programming) மொழிகளில் செயல் கூறு பணி மிகுப்பு ஒரு முக்கிய கூறாகும். சி#, சி++, ஜாவா மொழிகளில் இது உண்டு.

FwIW : எஃப்டபிள்யூஐடபிள்யூ : இதனால் என்ன பயன்? என்று பொருள்படும் For What It's Worth என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். மின்னஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும் இது பயன் படுத்தப்படுகிறது.

.FX : .எஃப்எக்ஸ் : இணையத்தில், ஃபிரான்ஸ் பெருநகரைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

FYI : எஃப்ஓய்ஐ : 1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள்படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப் பவர்க்குப் பயன்படக்கூடிய தகவல் களை அறிமுகப்படுத்தப் பயன் படுத்தப்படும் சொல். 2. கருத்து ரைக்கான கோரிக்கை (Request For Comments - RFC) போல இன்டர்நிக் (InterNIC) வழியாக வழங்கப்படும் ஒரு மின்னணு ஆவணம். ஆர்எஃப்சி என்பது வன்பொருள்/மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கானது. ஆனால் எஃப்ஓய்ஐ என்பது இணையத் தரவரையறை அல்லது பண்புக்கூறு பற்றிப் பயனாளர்களுக்கு விளக்கு வகை நோக்கமாகக் கொண்டது.