பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



.gb

203

.generation



சேர்ந்த இணைய தளத்தைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர். .gb : ஜி.பி: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இணைய தளத்தைக் குறிக் கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர். g-commerce : அரசு வாணிகம்.

.gd : ஜிடி: கிரினேடா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர்.

gender changer: இனம் மாற்றி: இரண்டு நுழையிணைப்பி (Male connector) அல்லது இரண்டு துளை

                  இனம் மாற்றி 

இணைப்பி (Female connector) முனைகளை இணைத்துவைக்கப் பயன்படும் ஒர் இடையிணைப்பி. general: பொது. general field : பொதுப்புலம். general section : பொதுப் பிரிவு, genetic engineering :மரபணுப் பொறியியல். general protection fault :பொதுப்பழுதுக் காப்பு: 80386 அல்லது அதனினும் மேம்பட்ட செயலி, பாதுகாக்கப்பட்ட முறையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது (காட்டாக விண்டோஸ் 3.x/9x இயக்கத்தில்), ஒரு பயன்பாட்டு நிரல், வரம்பு மீறி நினைவகத்தை அணுக முற்படும் போது ஏற்படுகின்ற பிழைநிலை. தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஜி.பீ.எஃப் (GPF). general public license: பொதுமக்கள் உரிமம்.

general purpose controller : பொதுப்பயன் கட்டுப்படுத்தி: பல்வேறு பயன்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒருவகைக் கட்டுப்படுத்தி.

general purpose interface bus : பொதுப்பயன் இடைமுகப் பாட்டை: கணினிகளுக்கும் தொழிலகத் தானியக்கமாக்கக் கருவிகளுக்கும் இடையே தகவல் பரிமாறிக்கொள் வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பாட்டை. இந்தப் பாட்டையின் மின் வரையறை ஐஇஇஇ தரக் கட்டுப் பாட்டில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. generation : தலைமுறை: 1. சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புத் தொகுதியின் பல்வேறு பதிப்புகளை வேறுபடுத்திக் காட்டப் பயன்படும் ஒரு கருத்துரு. மிகப்பழைய பதிப்பு தாத்தா என்றும், அடுத்தது அப்பா என்றும், புதியது மகன் என்றும் அழைக்கப்படுகிறது. 2. ஒரு செய லாக்கத்தை இன்னொரு செயலாக்கம் தொடங்கி வைக்கிறது. முந்தையது தந்தையாகிறது. தொடங்கப்பட்ட செயலாக்கம் மற்றுமொரு செய லாக்கத்தைத் தொடங்கி வைக்கலாம். அது, இதன் குழந்தையாகிறது. முந்தைய தந்தை இந்தக் குழந்தைக்கு தாத்தா ஆகிறது. 3. சில வேளைகளில் கணினி, நிரலாக்க மொழிகள்