பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

H

212

halftone




H

H.324:ஹெச்.324:பாட்ஸ் இணக்கி(POTS modem) வழியாக ஒளிக்காட்சித் தகவல் மற்றும் குரல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுப்புவதற்கான, பன்னாட்டுத் தொலைதொடர்புச் சங்கத்தின் தரவரையறைகள்.

hack1:ஏனோதானோ, சிரத்தையற்ற:அரைகுறை:1.நேர்த்தியான தீர்வு காணப் பொறுமையின்றி கணினி நிரலிலுள்ள கட்டளைகளை அவசரகோலமாய் மாற்றியமைத்தல். 2.அரைகுறை வேலை.

hack2:அரைகுறை: 1.படைப்பாக்கக் கூர்மதியுடன் ஒரு சிக்கலை அல்லது ஒரு திட்டப்பணியை அணுகுதல்.2.ஓர் இயக்க முறைமை அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் கட்டளையைத் திருத்தி,அதன் இயல்பான செயல்பாட்டை மாற்றியமைத்தல்.

hago:ஹேகோ:நல்லதைப் பெறுக என்று பொருள்படும் Have A Good One என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இணையத்தில் மின்னஞ்சலின் இறுதியிலோ,அரட்டையின் முடிவிலோ பயன்படுத்தப்படும் சொல்.

hairline:மயிரிழை;ஓர் அச்சிட்ட பக்கத்தில் அச்சிடப்படும் மிக மெல்லிய கோடு அல்லது திரையில் காட்டப்படும் குறைந்தபட்ச மெல்லிய கோடு.மயிரிழையின் அளவீடு,பயன்படுத்தப்படும் மென்பொருள்,வன்பொருள் அல்லது தொழில் நுட்பத்தைச் சார்ந்தது.அமெரிக்க நாட்டின் அஞ்சல்துறை மயிரிழை என்பதை 0.5பாயின்ட் (ஏறத்தாழ 0.007 அங்குலம்) என வரையறுத்துள்ளது.ஆனால் கிராஃபிக்ஸ் ஆர்ட்ஸ் டெக்னிக்கல் ஃபவுன்டேஷன் (GATF) மயிரிழை என்பது 0.003 அங்குலம் என வரையறுத்துள்ளது.

half adder,binary:இரும அரைக் கூட்டி.

half duplex transmission:அரை இருதிசை அலைபரப்பு:ஒரு நேரத்தில் ஒரு திசையில் மட்டும் நடைபெறும் இருவழி மின்னணுத் தகவல் தொடர்பு.

half height drive:அரை உயர இயக்ககம்: இயக்ககங்களின் தலைமுறையைக் குறிக்கும் சொல்.முந்தைய தலைமுறை சார்ந்த இயக்ககத்தின் உயரத்தில் பாதி உயரம் கொண்ட இயக்ககத்தைக் குறிக்கும் சொல்தொடர்.

half router:session;அரைத்திசைவி:ஓர் இணக்கியைப் பயன்படுத்தி,ஒரு குறும்பரப்புப் பிணையத்தை தகவல் தொடர்புத் தடத்தில் (இணையத்தில் இணைப்பது போன்று) இணைக்கும் ஒரு சாதனம்.

half subtractor:அரைக் கழிப்பி.

halftone:நுண்பதிவுப் படம்:ஒரு ஒளிப்படத்தை அல்லது உருவப்படத்தை சமஇடைவெளியில் அமைந்த வேறுபட்ட அளவுகளில் அமைந்த புள்ளிகளைக்கொண்ட நகலாகப் படியெடுத்தல். ஒளிப்படத்திலுள்ள ஒளி மாறுபாட்டு அளவுகளை சாம்பல் நிறச் சாயை