பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

installer

237

integral modem


பொருள் தொகுப்பைக் கணினியில் நிறுவ உதவுவதே நிறுவு நிரலின் பணி. சட்டத்துக்குப் புறம்பாக அம்மென்பொருள் தொகுப்பை நகலெடுத்துப் பயன்படுத்த முடியாதவாறு நகல் பாதுகாப்பு (Copy Protection) பணியையும் இந்த நிரல் செய்வதுண்டு.

installer : இன்ஸ்டாலர்; நிறுவுனர்; நிறுவி :ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையுடன் தரப்படும் ஒரு நிரல். பின்னாளில் தரப்படும் முறைமை மேம்பாட்டுக் கூறுகளை கணினியில் நிறுவிக் கொள்ளவும், முறைமை இயக்கு வட்டுகளை (Bootable disks)உருவாக்கவும் இந்த நிறுவி நிரல் பயனாளருக்கு உதவுகிறது.

installing software: நிறுவு மென்பொருள்.

instant message :உடனடிச் செய்தி .

instant on modem :உடனடி இயக்க இணக்கி.

instant print :உடனடி அச்சு.

instantaneous :அப்போதே.

instruction address:ஆணை முகவரி.

instruction, arithmetical :எண் கணித ஆணை.

instruction, branch:கிளைபிரி ஆணை.

instruction, break point:நிறுத்துமிட ஆணை.

instruction, computer :கணினிக்கட்டளை, கணினி ஆணை.

insulator : மின்விலக்கி : 1.ரப்பர்,கண்ணாடி,பீங்கான் போன்று மின்சாரத்தை அரிதில் கடத்தும் (அல்லது கடத்தாத) பொருட்களை மின் விலக்கிகள் என்கிறோம். 2. ஒரு மின்சுற்றில் மின்சாரம் தவறான பாதையில் பாயாமல் இருக்கும் பொருட்டு இரு உறுப்புகளுக்கிடையே காப்பாகப் பயன்படுத்தப்படும் கருவி. 3.மிக உயர்ந்த மின்பரப்புக் கோபுரங்களில் உயர் மின்னழுத்தக் கம்பிகளிலிருந்து மின்சாரம் பாயாமல் இருக்க களிமண்/பீங்கான் மின்விலக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

instruction, conditional branch : நிபந்தனைக் கிளை ஆணை.

instruction, data manipulation : தகவல் கையாளல் கட்டளை.

instruction, fetch : கொணர் ஆணை.

instruction format, addressless : முகவரியிலா ஆணை வடிவம்.

instruction, halt :நிறுத்தக் கட்டளை:நிறுத்தல் ஆணை.

instruction, jump :தாவு கட்டளை; தாவல் ஆணை.

instruction,machine:எந்திர ஆணை; பொறி ஆணை.

instruction, null : வெற்று ஆணை.

instruction register, current :நடப்பு ஆணைப் பதிவகம்.

instruction, unconditional branch : நிபந்தனையற்ற கிளைபிரி ஆணை.

instrument, input: உள்ளீட்டுக் கருவி .

integer array :முழுஎண் கோவை.

integer attribute :முழுஎண் பண்புக் கூறு.

integer type :முழுஎண் இனம்.

integral modem :ஒருங்கிணை இணக்கி : கணினிப் பெட்டிக்குள் தாய்ப்பலகையிலேயே பொருத்தப் படுகிற இனக்கி. தாய்ப்பலகை