பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

logical board

272

list lookup


கட்டளை அமைக்கலாம்.இதில் B என்பது தருக்க சாதனமாகச் செயல்படுகிறது.

logic board:தருக்கப் பலகை:தாய்ப்பலகைக்கு அல்லது செயலிப் பலகைக்கு இன்னொரு பெயர்.முற்காலக் கணினிகளில் ஒளிக்காட்சிப் பலகையை(தொடர் (popul Lavo-Analog Board)தாய்ப்பலகையிலிருந்து பிரித்துக்காட்ட இப்பெயர் வழங்கலாயிற்று.

logical data design:தருக்கமுறைத் தரவு வடிவமைப்பு.

logical decision:தருக்கமுறைத் தீர்வு.

logical interface:தருக்க இடைமுகம்.

logical network:தருக்கமுறைப் பிணையம்.

logical shift:தருக்கமுறை நகர்வு.

logical unit:தருக்கமுறை அலகு.

'logic operator:தருக்க இயக்கி;தருக்கச் செயற்குறி.

logic programming:தருக்க நிரலாக்கம்.

logic seaking:தருக்கத் தேடல்.

logic symbol:தருக்கக் குறீயீடு.

logic theorist:தருக்கக் கோட்பாடு.

logic tree:தருக்க மரம்:கிளைபிரி உருவகிப்புகளைப் பயன்படுத்தும் ஒரு தருக்க வழிமுறையாகும்.மரத்தின் ஒவ்வொரு கிளைக்கணுவும் ஒரு தீர்வுசெய்புள்ளியைக் குறிக்கின்றன.கிளையின் நுனியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறிக்கப்பட்டிருக்கும்.

long filenames:நீண்ட கோப்புப்பெயர்: அண்மைக்கால பீசி இயக்கமுறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98,விண்டோஸ் என்டி மற்றும் ஓஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட,பயனாளருக்கு வாய்ப்புத் தருகிறது.250-க்கு மேற்பட்ட எழுத்துகளில் கோப்பிற்குப் பெயர் சூட்டலாம். ஆங்கிலச் சிறியஎழுத்து,பெரியஎழுத்து மற்றும் இரு சொற்களுக்கு இடையே இடவெளி இருக்கலாம்.

login security:உள்நுழை காப்பு.

logon file:நுழைமுறை கோப்பு:தொடங்கு கோப்பு:புகுதிகைக் கோப்பு.

lock and teel:தோற்றமும் உணர்வும்': தோற்றம்-செயல்பாடு: ஒரு வன்பொருள் அல்லது மென்பொருளின் தோற்றம் மற்றும் செயல்பாட்டைக் குறிக்கும் தொடர்.பெரும்பாலும் இத்தொடர் ஒப்பிட்டுச் சொல்லப் பயன்படுகிறது.(எ-டு) விண்டோஸ் என்டி-யின் தோற்றமும் உணர்வும் விண்டோஸ் 95 போலவே இருக்கிறது.

look in:உள் நோக்கு.

lookup :தேடியறி:விரிதாள் நிரல்களில் உள்ளிணைக்கப்படும் கூறு.ஒரு குறிப்பிட்ட விரிதாள் பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுத் தளத்தில் தகவலை எளிதாகத் தேடியறியும் பொருட்டு முன்கூட்டியே தரவுத் தளத்தின் முதன்மை மதிப்புகளைக் கொண்ட தேடியறி (Lookup)அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கும். தேடியறி அட்டவணையில் கிடக்கை (Row) நெடுக்கை (Column)களில் தகவல் பதியப்பட்டிருக்கும்.ஒரு தேடியறி செயல்கூறு (Lookup Function)இந்த அட்டவணையில் கிடைமட்டமாகவோ செங்குத்தாகவோ குறிப்