பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



mail receipient

278

main loop



முகவரிப் பட்டியலை மேலாண்மை செய்யும் மென்பொருள். வாடிக்கை யாளர்கள் அனுப்பும் செய்திகளை இந்த மென்பொருள் ஏற்கும். பயனாளர்களின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளும். எடுத்துக்காட்டாக, அஞ்சல் பட்டிய லில் பெயரை இணைத்துக்கொள்ளு தல், நீக்கி விடுதல், லிஸ்ட்செர்வ் (LISTSERV), மேஜர்டெமோ (Major Domo) போன்றவை பரவலாகப் பயன்பாட்டில் உள்ள அஞ்சல் பட்டியல் மேலாளர்கள் ஆகும்.

mail receipient : அஞ்சல் பெறுநர்.

mail reflector : அஞ்சல் பிரதிபலிப்பு: ஒரு அஞ்சல் பட்டியலுக்கு அனுப்பப் பட்ட செய்திகளை செய்திக்குழு வடி வத்துக்கு மாற்றியமைத்து வைக்கப் பட்டுள்ள ஒரு செய்திக்குழு.

mail server : அஞ்சல் வழங்கன்.

mailto : மெயில்டூ : ஒரு ஹெச்டீ எம்எல் கோப்பில் மின்னஞ்சல் அனுப்புவதைக் குறிப்பிடும் மீத்தொடுப்பு (Hyperlink) HREF என்னும் குறி சொல்லால் (Tag) இது குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, குமரேசன் என்பவரின் மின்னஞ்சல் முகவரி kumar@.yahoo.com என்று வைத்துக்கொள்வோம். ஹெச்டீ எம்எல் ஆவணத்தில்,

<A HREF = "maito :

     kumar@yahoo.com">

E-mail : Kumaresan </A>

பயனாளர் E-mail : Kumaresan என்ற மீத்தொடுப்பின் மீது சுட்டியால் சொடுக்கினால்போதும். பயனாள ரின் கணினியிலுள்ள மின்னஞ்சல் மென்பொருள் இயங்கத் தொடங் கும். அதில் To என்ற இடத்தில் kumar@yahoo.com என்ற முகவரி இடம் பெற்றிருக்கும்.

main body : மைப் பகுதி; முதன் மைப் பகுதி ; ஒரு கணினி நிரலில் துணை நிரல்களை இயக்கும் கட்டளைகளும் பிற இன்றியமை யாக் கட்டளைகளும் அடங்கிய நிரலின் முதன்மைப் பகுதி.

mainframe computer : பெருமுகக் கணினி; மையச் சட்டக் கணினி : மிகச் சிக்கலான கணக்கீட்டுப் பணிகளை நிறைவேற்றுவதற்கென உருவாக்கப்பட்ட உயர்நிலைக் கணினி. இவ்வகைக் கணினி அமைப்பில் பெரும்பாலும் நூற்றுக் கணக்கான (சிலவற்றில் பல்லாயிரக் கணக்கில்) முனையங்கள் இணைக் கப்பட்டு ஒரே நேரத்தில் ஏராளமான பயனாளர்கள் பணிபுரிவர்.

main function : மூல/முதன்மை/முக்கிய/மையச் செயல்கூறு : ஒரு கணினி நிரலில் முக்கிய பகுதி. செயல்கூறு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளில் எழுதப்படும் நிரல்களில் ஏனைய செயல்கூறுகளை அழைத்து, பணியை நிறை வேற்றும் முதன்மையான செயல்கூறு. (எ-டு) சி-மொழியில் ஒரு நிரலில் எத்தனை செயல்கூறுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் main() என்கிற செயல்கூறு கட்டாயம் இருக்க வேண் டும். ஒரு நிரலானது அதில்தான் தொடங்கி முடியும்.

main loop : முக்கிய/மைய மடக்கி : ஒரு கணினி நிரலில் முதன்மைப் பகுதியில் இடம் பெற்றுள்ள மடக்கி. நிரலின் முக்கிய பணியை இந்த மடக்கிதான் நிறைவேற்றும். ஒரு குறிப்பிட்ட நிபந்தனை சரி அல்லது தவறாக இருக்கும்வரை இந்த மடக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும்.