பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



real address

378

real time projects


real address : மெய் முகவரி : நினை வகத்தின் ஒரு குறிப்பிட்ட இருப் பிடத்தை குறிக்கும் முற்று (Absolute) முகவரி, பொறி முகவரி (Machine Address) என்றும் கூறலாம்.

Real Audio : ரியல் ஆடியோ : இணையத்தில் பெருமளவு பயன்படுத்தப் படும் மென்பொருள். இறுக்கிச் சுருக்கி வலை வழங்கன்களில் (Web Server) சேமித்து வைக்கப்பட்டுள்ள இசைப்பாடல்கோப்புகளை இணைய உலாவி மூலம் கொணர்ந்து, பயனாளரின் கணினியில் அதனை விரித்துப் பாடவைக்கும். இணையத் தில் நிகழ்நேர (Live) பாடல்களையும் கேட்கலாம். குறிப்பு: இப்போது கேட்பொலி, ஒளிக்காட்சி இரண்டுக் கும் சேர்த்து ரியல்பிளேயர் என்ற பெயரில் இணையத்தில் கிடைக் கிறது. இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

real/float : புள்ளி எண்; மெய்யெண்.

realloca : ரீ-அலாக்; மறு ஒதுக்கீடு : சி-மொழியிலுள்ள ஓர் உள்ளிணைக் கப்பட்ட செயல்கூறு. எம்அலாக் (malloc) என்னும் செயல்கூறு மூலம் ஏற்கெனவே குவியல் நினைவகத்தில் (heap memory}) ஒரு குறிப்பிட்ட சுட்டுக்கு (pointer) ஒதுக்கப்பட்ட நினைவகப் பகுதியை அதிகமாக்கு வதற்கான செயல்கூறு.

real mode : மெய்ப் பாங்கு : இன் டெல் 80x86 குடும்ப நுண்செயலி களில் செயல்படுத்தப்படும் இயக்கப் பாங்கு. மெய்ப்பாங்கு முறையில் செயலியானது ஒரு நேரத்தில் ஒரு நிரலை மட்டுமே இயக்க முடியும். 1 எம்பி நினைவகத்துக்கு மேல் அணுக முடியாது. ஆனால் முதன்மை நினைவகத்தையும், உள்ளீட்டு/ வெளியீட்டு சாதனங்களையும் தாராளமாக அணுக முடியும். 8086 செயலியில் மெய்ப்பாங்கு மட்டுமே உண்டு. எம் எஸ் டாஸ் இயக்க முறைமை மெய்ப்பாங்கில் மட்டுமே செயல்படும். இதற்கு மாறாக 80286 மற்றும் பிறகு வந்த நுண்செயலி களில் பாதுகாக்கப்பட்ட பாங்கு (Protected Mode) அறிமுகப்படுத்தப் பட்டது. இதில் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யமுடியும். விண் டோஸ் இயக்க முறைமை போன்ற பல்பணி இயக்க முறைமைகள் இதில் செயல்படும். இதற்குத் தேவை யான நினைவக மேலாண்மை மற்றும் நினைவகப் பாதுகாப்பினை பாதுகாக்கப்பட்ட பாங்கு வழங்குகிறது.

real-mode mapper ; மெய்ப்பாங்கு உறவாக்கி : விண்டோஸ் 3.x இயக்கச் சூழலில் 32 துண்மி (பிட்) கோப்பு முறைமையை அணுகுவதற்கான வசதி. டாஸ் சாதன இயக்கிக்கு 32-பிட் வட்டு அணுகு இடை முகத்தை இந்த மெய்ப்பாங்கு உற வாக்கி வழங்குகிறது.

Real Soon Now : மெய்-விரைவில்-இப்போது; கூடிய விரைவில்; வெகு விரைவில்: உண்மையில் வெகுவிரைவில் நடைபெறாத ஒன் றைக் குறிப்பது. ஒரு வணிக முறை நிரல் ஒரு குறிப்பிட்ட வசதியை அடுத்தப் பதிப்பில் தரும் என அறிவித்துவிட்டுப் பல பதிப்பு களுக்குப் பின்னும் அவ்வசதியை வழங்காமலிருத்தல்.

real-time animation : நிகழ்நேர அசைவூட்டம்.

real-time output : நிகழ்நேர வெளியீடு.

real time projects : நிகழ்நேர செயல் திட்டம்; நிகழ்நேர திட்டப்பணி.