பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

root directory

394

rotation tool

கின்ற பயனாளரின்கணக்கு முறைமை நிர்வாகி, கணினி அமைப்பின் பராமரிப்புக்காக இந்தக் கணக்கினைத் தான் பயன்படுத்திக் கொள்கிறார்.

root directory :மூலக்கோப்பகம்; வேர்க்கோப்பகம்,முதன்மைக் கோப்பகம்,தலைமைக் கோப்பகம் : வட்டு அடிப்படையிலான படிநிலைக் கோப்பகக் கட்டமைப்புகளில் தலைமையாக இருப்பது. இதிலிருந்தே பிற கோப்பகங்களும் உள்கோப்பகங்களும் பிரிகின்றன. ஒவ்வொரு கோப்பகமும் ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகள் அல்லது உள்-கோப்பகங்களைக் கொண்டிருக்கலாம்.(எ-டு) டாஸ் இயக்க முறைமையில் பின்சாய்வுக் கோடு (\) மூலக் கோப்பகத்தைக் குறிக்கிறது. அதன்கீழ்தான் பிற கோப் பகங்களும், உள் கோப்பகங்களும், கோப்புகளும் இடம்பெறுகின்றன.

root name : முதன்மைப் பெயர் : எம்எஸ் டாஸ், விண்டோஸ் போன்ற இயக்க முறைமையில் ஒரு கோப்பின் பெயர் இருபகுதிகளைக் கொண்டது. முதல்பகுதி முதன்மைப் பெயர் என்றும், அடுத்த பகுதி நீட்டிப்பு (Extension) என்றும் அழைக்கப்படுகிறது. நீட்டிப்பு பெரும்பாலும் அக்கோப்பின் வகையைக் குறிப்பதாக அமையும் . (எ -டு)): COMMAND.COM EDIT.EXE LETTER.TXT டாஸ் மற்றும் விண்டோஸ் 3.x-ல் முதன்மைப்பெயர் அதிக அளவாக எட்டு எழுத்துகளையே கொண்டிருக்கும். வகைப்பெயர் அதிக அளவாக மூன்றெழுத்துகள். இரண்டுக்கும் இடையே ஒரு புள்ளி இடம்பெறும். விண்டோஸ் 95/98/என்டி மற்றும் பிறகு வந்தவற்றில் கோப்பின் பெயர் அதிக அளவாக 255 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம்.

ROT13 encryption : ராட் 13 மறையாக்கம் : ஒர் எளிய தகவல் மறையாக்க முறை. தகவலிலுள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும், அதற்கடுத்து 13 எழுத்துகளும் பிறகுவரும் எழுத்தால் பதிலீடு செய்யப்பட்டிருக்கும். (எ-டு) A என்னும் எழுத்துக்குப் பதில் N என்னும் எழுத்து பதிலீடு செய்யப்படும். மறுமுனையில் N என்னும் எழுத்து A என மாற்றப்படும். Z என்னும் எழுத்து M-ஆக மாற்றப்படும். ராட்13 மறையாக்கம், தகவலைப் பிறர் படிக்கக் கூடாது என்பதற்காகச் செய்யப்படுவதில்லை. செய்திக் குழுக்களில் பயனாளர் படிக்க விரும்பாத ஆபாசத் தகவல்களை குறியாக்கம் செய்யவே பயன்படுத்தப்படுகின்றன. சில செய்தி படிப்பு மென்பொருள்களில் ஒரு விசையை அழுத்தியவுடனே மறையாக்கம் செய்யவும், மறைவிலக்கம் செய்யவும் வசதி உண்டு.

rotate : சுழற்று; திருகு; சுழல்நகர்வு : 1.திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப்படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில்(register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம் ஒரிடம் நகரச் செய்தல். இத்தகைய நகர்வினால் ஒரு முனையில் இடமின்றி நகர்த்தப் டும் இறுதி துண்மி(பிட்) எதிர் முனையில் வெற்றிடமாகும் இடத்தில் ஒட்டிக் கொள்ளும்.

rotation tool :சுழற்று கருவி.